#HBDTHALAPATHYVijay: ரசிகர்களுக்கு போட்டியாக தெறிக்கவிடும் திரை பிரபலங்கள்.. திணறும் டிவிட்டர்!
சென்னை: நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video
நடிகர் விஜய் இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை திணற விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். அவற்றில் சில..

தெறி படத்தின் போது
நடிகர் விஜய்க்கு தயாரப்பாளர் தனஞ்ஜெயனும் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். மேலும் தெறி படத்தின் சென்சார் பிரிவியூன் போது எடுத்த போட்டோவையும் தனஞ்ஜெயன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

என் சூப்பர் ஸ்டார்
இதேபோல் நடிகை வனிதா விஜயக்குமாரும் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 25 ஆண்டுகளுக்கு முன்பு குலு மணாலியில் அரும்பும் தலிரே பாடலுக்காக சென்றிருந்தோம், அப்போது உங்களின் 21வது பிறந்தநாளை நாம் அங்கு கொண்டாடினோம். அவை அனைத்தும் என் நினைவில் ஃபிரஷாக உள்ளது. நமக்கு வயதாகியிருக்கலாம், ஆனால் அந்த விலைமதிப்பற்ற தருணங்கள் பசுமையான & அழகானவை.. நீங்கள் எப்போதும் எனது சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார்.

பிரார்த்தனைகள்
ஈரம், வல்லினம், ஆறாது சினம் ஆகிய படங்களின் இயக்குநரான அறிவழகனும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். சொற்கள் மற்றும் புகழ்ச்சியை விட, என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள் மற்றும் என் அன்பு உங்களுக்காக விஜய் சார் என டிவிட்டியிருக்கிறார்.

காத்திருக்கிறோம்..
இதேபோல் இசையமைப்பாளர் சந்தோஷ் சிவனும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளர். இதுகுறித்து பதிவிட்டுள்ள டிவிட்டில், உங்களுடைய இந்த நாளும் வருடமும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும், உங்களின் மாஸ்டர் படத்திற்காக காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

செல்லப்பிள்ளை
இதேபோல் நடிகை ஆர்த்தியும் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழகத்தாய்மார்களின் செல்லப்பிள்ளை
நேற்றைய இளையத்தளபதி
இன்றைய தளபதி
நாளைய?!?!
அமைதியான புன்னகைக்கு சொந்தக்காரன்
ஆர்பரிக்கும் ரசிகர்களின் ரசிகன்
விஜய் புரோக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











