மாசாக வெளியான விஜய்யின் பீஸ்ட் பட ட்ரெயிலர்... திரைப்பிரபலங்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
சென்னை : நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ட்ரெயிலர்தான் தற்போது தொடர்ந்து யூடியூப், ட்விட்டர் பக்கங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில், பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

நடிகர் விஜய்
நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் சூட்டிங் துவங்கியதில் இருந்தே விஜய் ரசிகர்கள் படத்தை தொடர்ந்து ட்ரெண்டிங்கில் வைத்து வருகின்றனர்.படத்தின் அப்டேட் குறித்து படக்குழுவை தொடர்ந்து கேட்டு வந்தனர்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பாடல்கள் யூடியூபில் அதிரடி கிளப்பி வருகிறது. கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்று தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்தப் பாடலுக்கு பிரபலங்கள் நடனமாடி அந்த வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்கான பாடல்கள்
சமந்தா, ராஷ்மிகா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் இந்தப் பாடல்களுக்கு நடனமாடி அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவும் அரபிக்குத்து பாடலுக்கு மீண்டும் நடனமாடி அந்த வீடியோவை பதிவிட்டதை பார்க்க முடிந்தது.

ட்ரெயிலர் வெளியீடு
இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தொடர்ந்து 2.1 கோடி வியூஸ்களை தாண்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நேற்று மாலை இந்த ட்ரெயிலர் வெளியான நிலையில், ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் இந்த ட்ரெயிலரை கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் பாராட்டு
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்ரெயிலரில் விஜய் நெருப்பாக காணப்படுவதாக தெரிவித்துள்ளார். பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் பெரிய வசூலை குவிக்கும் என்று கூறியுள்ள அவர், தனது நண்பர் நெல்சன் மற்றும் அனிருத்துக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ட்ரெயிலரில் செல்வராகவனை பார்ப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெங்கட்பிரபு வாழ்த்து
இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திருவிழாவாக இருக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்டரையும் பகிர்ந்துள்ளார். இதேபோல படத்தின் கலை இயக்குநர் கிரண், நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டவர்களும் படத்தின் ட்ரெயிலருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் பாராட்டு
இதனிடையே விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் வேற லெவல் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். பாலிவுட் நாயகி ஜான்வி கபூரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல படத்தின் இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சாந்தனு உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











