Don't Miss!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- News மத்திய சென்னையில் ஒரு லட்சம் வாக்குகளை திமுக நீக்கிவிட்டது.. பாஜக வினோஜ் செல்வம் பகீர் குற்றச்சாட்டு
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள்.. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் வாழ்த்து மழை!
சென்னை: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் 1943ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பிறந்தார் இளையராஜா. ஆனால் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் பிறந்தநாளும் ஜூன் 3ஆம் தேதி என்பதால், அவர் மீது கொண்ட மரியாதையின் பேரில் தனது பிறந்தநாளை ஜூன் 2ம் தேதியே கொண்டாடி வருகிறார்.
அதன்படி அவரது பிறந்தநாளான இன்று திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜாவுக்கு 77 வது பர்த் டே.. புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே.. உணர்வுகளைப் பேசும் மொழி!
தேவிஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் இளையராஜா சாரின் பிறந்த நாள், இசை பிரியர்களுக்கெல்லாம் திருவிழா. இதனை முன்னிட்டு இன்ஸ்ருமென்டல் பர்ஃபார்மன்ஸ் வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் உதயா
இதேபோல் நடிகர் உதயா பதிவிட்டுள்ள டிவிட்டில், என் முதல் படம் "திருநெல்வேலி "இசைஞானி இசையில்.என் பாக்கியம்.என் மூன்றாவது படம் இசைஞானி இசையில் கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் காதல் சாதி எனக்குப் பெருமை.. இசையின் ராஜாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.. என பதிவிட்டுள்ளார்.
நடிகர் மனோஜ்
இதேபோல் நடிகர் மனோஜ் பிறந்த நாள் வாழ்த்துகள் இளையராஜா அங்கிள் என பதிவிட்டுள்ளார். மேலும் இளையராஜாவுடன் தனது குடும்பத்தினர் எடுத்த போட்டோக்களை எல்லாம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மனோஜ்.
இயக்குநர் மோகன்
இதேபோல் வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படத்தின் இயக்குநரான மோகனும் இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் #இசைஞானி அவர்களுக்கு.. என பதிவிட்டுள்ளார்.