மணி விழா கொண்டாடும் மோகன் லால்.. சினிமா பிரபலங்கள் வாழ்த்து.. டிரெண்டாகும் #HappyBirthdayMohanlal

கேரளா: மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன் லாலின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

1980ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் அறிமுகமான மோகன் லால் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மோகன் லாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள், இந்தியத் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே லாலேட்டா

ஹேப்பி பர்த்டே லாலேட்டா

1960ம் ஆண்டு மே 21ம் தேதி கேரளாவில் பிறந்த நடிகர் மோகன் லால் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். லால் ஏட்டா என செல்லமாக அழைக்கப்படும் மோகன் லாலுக்கு மலையாள திரையுலகினர் மற்றும் இந்திய சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். நடிகர் நிவின் பாலி ஹேப்பி பர்த்தே லாலேட்டா என அவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

ஹன்சிகா வாழ்த்து

ஹன்சிகா வாழ்த்து

கடந்த 2017ம் ஆண்டு வெளியான வில்லன் படத்தில் மோகன்லால், விஷாலுடன் இணைந்து நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நடிகர் மோகன் லாலுக்கு ஹன்சிகா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், உங்களுடன் இணைந்து நடித்த பாக்கியம் எனக்கு கிடைத்தது நான் செய்த அதிர்ஷ்டம் எனக் கூறியுள்ளார்.

அரபிக் கடலின் சிங்கம்

அரபிக் கடலின் சிங்கம்

கொரோனா வைரஸ் காரணமாக இந்த லாக்டவுன் மட்டும் ஏற்படாமல் இருந்திருந்தால், இந்நேரம் மோகன் லாலின் மரைக்காயர் அரபிக் கடலின் சிங்கம் படம் ரிலீசாகி, பல பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை அசால்ட்டாக முடித்திருக்கும். அந்த படத்தின் சில ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டு படக்குழு மோகன் லாலை வாழ்த்தியுள்ளது.

கிரண் வாழ்த்து

கிரண் வாழ்த்து

இயக்குநர் சாஜி கைலாஷ் இயக்கத்தில் கடந்த 2002ம் ஆண்டு வெளியான தாண்டவம் படத்தில் நடிகர் மோகன் லாலுக்கு ஜோடியாக கிரண் நடித்திருந்தார். ஜெமினி, வில்லன் என தமிழ் படங்களில் நடித்து பிரபலமான அவருக்கு தென்னிந்திய சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தின் புகைப்படத்தை ஷேர் செய்து மோகன் லாலை வாழ்த்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X