ரஜினிக்கு பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து மழை.. யாரெல்லாம் வாழ்த்து சொல்லியிருக்காங்க பாருங்க!

Recommended Video

Thalaivar 70th Birthday Celebration In Dubai

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும் நலத்திட்ட உதவிகளுடனும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு #HBDSuperstarRajinikanth #HBDThalaivarSuperstarRAJINI #HappyBirthdayRajinikanth #HBDThalaivarRAJINIKANTH #HBDThalaivarRAJINIKANTH #HBDThalaivaa #HappyBirthdaySuperstar ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. ரஜினியின் பிறந்த நாளுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

எல்லாமுமான அப்பா

ரஜினியின் மகளான சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையே தனது அப்பாதான் என்றும் தனக்கு எல்லாமும் தனது அப்பாதான் என்றும் தெரிவித்திருக்கிறார் சவுந்தர்யா.

அரிய மனிதர்

இயக்குநர் சேரன் பதிவிட்டுள்ள டிவிட்டில் இன்று பிறந்தநாள்..
எத்தனை பெரிய அரிய மனிதர்..
எவ்வளவோ உயரங்கள் கண்டபோதும் எளிமையாக மனிதநேயத்துடன் வாழும் உன்னதர்..
அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமைகொள்கிறேன்.. என தெரிவித்துள்ளார்.

அதிசய மனிதர்

நடிகை சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ள டிவிட்டில் அதிசய மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. லட்சக்கணக்கான மக்களில் பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாரானாவர் ரஜினிகாந்த் என குறிப்பிட்டிருக்கிறார்.

ஹேப்பி சூப்பர்ஸ்டார்..

இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள டிவிட்டில் ஹேப்பி சூப்பர் ஸ்டார் டூ பர்த்டே என வித்தியாசமாக வாழ்த்தியிருக்கிறார்.

எங்கள் சூப்பர் ஸ்டார்

எங்கள் சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்துகள் என இயக்குநரும் நடிகருமான மனோ பாலா தெரிவித்துள்ளார்.

தலைவருக்கு பிறந்தநாள்

நகைச்சுவை நடிகர் யோகிபாபு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர்.

வாழ்த்துகள் தலைவா

நடிகர் பிரேம்ஜி பதிவிட்டிருக்கும் டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா.. என தெரிவித்துள்ளார்.

தலைவா ரஜினிகாந்த்

சீரியல் நடிகை நீலிமா பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா ரஜினிகாந்த் அவர்களே.. நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என பதிவிட்டிருக்கிறார்.

வாழ்த்துகள் தலைவா

இயக்குநர் அட்லி பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா என தெரிவித்திருக்கிறார்.

ஒரே சூப்பர் ஸ்டார்

இசையமைப்பாளரும் ரஜினியின் உறவினருமான அனிருத் இந்த உலகத்திலேயே நான் அதிகம் நேசிக்கும் மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.. அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் என தெரிவித்துள்ளார்.

எப்போதும் நேசிக்கும் ரஜினி

நடிகை அதுல்யா ரவி பதிவிட்டுள்ள டிவிட்டில் நான் எப்போதும் ரசிக்கும் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து என தெரிவித்திருக்கிறார்.

ஊக்கமளியுங்கள் சார்

இசையமைப்பாளர் இமான் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஜினி சாருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நீங்கள் உருவாக்கும் நேர்மறையான ஒளி மூலம் எங்களுக்கு ஊக்கமளியுங்கள்! நீண்ட காலம் வாழ வேண்டும்! சார் என பதிவிட்டிருக்கிறார்.

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்

நடிகர் ரோபோ சங்கர் பதிவிட்டுள்ள டிவிட்டில் பிறந்தநாள் வாழ்த்து ஒரே ஒரு சூப்பர் ஸ்டாருக்கு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X