என் இன்ஸ்பிரேஷன் மச்சான்.. இன்னும் உன் பேச்ச மறக்கல.. சூரிக்கு டக்கராய் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!
சென்னை: நடிகர் சூரியின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஆர்யா முதல் விஜய் டிவி புகழ் வரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார் நடிகர் சூரி. சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து இன்று டாப் நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி. தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுடனும் நல்ல நட்பையும் கொண்டுள்ளார் சூரி.

சிவகார்த்திகேயனுடன டான் படம்
நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போட்டோக்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

ரஜினியுடன் அண்ணாத்த படம்
இதேபோல் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் சூரி. இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இந்நிலையில் நடிகர் சூரி தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உன் பேச்ச மறக்க முடியல மச்சான்
அந்த வகையில் நடிகர் ஆர்யா சூரியின் கலக்கல் வீடியோவை ஷேர் செய்து டிவிட்டியுள்ளார். அதில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். உன்னோட பேச்ச இன்னும் என்னால மறக்க முடியல.. சூப்பர் கூல் மற்றும் செக்ஸியாக இருக்கிறாய்.. அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும்.. உன்னுடைய அனைத்து படங்களையும் காண காத்திருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இதேபோல் நடிகை அதுல்யா ரவி பதிவிட்டுள்ள டிவிட்டில் என் அன்பான அழகான அண்ணணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாகவும் , எங்களை உங்கள் நடிப்பால் சிரிக்க வைக்க மனதார வாழ்த்துகிறேன் அண்ணா ! என குறிப்பிட்டுள்ளார்.
முயற்சியினால் தனக்கென ஒரு இடம்
தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ள டிவிட்டில் கடின உழைப்பை கையிலெடுத்து, பெரும் முயற்சியினால் தனக்கென ஒரு இடம் என மகுடம் சூடியிருக்கும் நம் "நகைச்சுவை நாயகன்" சூரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். என பதிவிட்டுள்ளார்.
பல வெற்றிகளுடன் அற்புதமான ஆண்டாக
நகைச்சுவை நடிகர் சதீஷ் பதிவிட்டுள்ள டிவீட்டில், பிறந்த நாள் வாழ்த்துகள் சூரி அண்ணன், பல வெற்றிகளுடன் அற்புதமான ஆண்டாக அமைய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் பிரதர்
இதேபோல் இயக்குநர் பொன்ராமும் நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில், பிறந்த நாள் வாழ்த்துகள் டியர் பிரதர் என குறிப்பிட்டுள்ளார்.
எங்களை எப்போதும் எண்டெர்டெய்ன் செய்யுங்கள்
இதேபோல் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமனா எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் பதிவிட்டிருப்பதாவது, சூரி சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.. உங்களின் வித்தியாசமான அமேஸிங் ஸ்டைலால் எங்களை எப்போதும் எண்டெர்டெய்னிங் செய்யுங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலாஜி வாழ்த்து
இதேபோல் பிக்பாஸ் பிரபலமான பாலாஜி முருகதாஸும் நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா தெரிவித்துள்ளார்.
பல்லாண்டு வாழ வேண்டும் அண்ணா
இதேபோல் விஜய் டிவி பிரபலமான சூரி பதிவிட்டுள்ள டிவிட்டில், அன்பு அண்ணன் சூரிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... திரைத்துறையில் ஒரு சிறிய பரோட்டாவில் தொடங்கிய உங்களது பயணம்... இப்போது நீங்கள் எட்டியிருக்கும் புகழோ ஏராளம்... நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் அண்ணா... என்றும் உங்கள் ஆசியுடன் அன்பு தம்பி புகழ்... என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











