Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தேசிய விருது: சிவகார்த்திகேயன் முதல் மாளவிகா மோகனன் வரை வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!
சென்னை: தேசிய விருது பெற்ற கலைஞர்களுக்கு சிவகார்த்திகேயன் முதல் மாளவிகா மோகனன் வரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமாவுக்கு மட்டும் மொத்தம் 7 விருதுகள் கிடைத்துள்ளன.
அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருதும், அப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 7 விருதுகள்
இதேபோல் பார்த்திபனின் ஒத்த செருப்பு படத்துக்கு இரண்டு விருதுகள், டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது, நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது, விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது என மொத்தம் 7 விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது.
|
நடிகர் சிவகார்த்திகேயன்
விருதுகளை பெறும் கலைஞர்களுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள டிவிட்டில் தனுஷ், இமான், விஜய் சேதுபதி, பார்த்திபன், வெற்றிமாறன், நாக விஷால், ரசூல் பூக்குட்டி ஆகியோரின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். நீங்கள் அனைவரும் தமிழ் சினிமாவை பெருமை பட செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
|
நடிகர் ஜெயம் ரவி
இதேபோல் நடிகர் ஜெயம் ரவி பதிவிட்டுள்ள டிவிட்டில், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள். எங்கள் எல்லோரையும் பெருமைபட செய்த உங்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
|
நடிகர் கார்த்தி
இதேபோல் நடிகர் கார்த்தி பதவிட்டுள்ள டிவிட்டில், இந்த சிறந்த படங்களில் அங்கம் வகித்து தேசிய விருது வென்றவர்களுக்கு பல வாழ்த்துக்கள்! என குறிப்பிட்டுள்ளார்.
|
கவிஞர் வைரமுத்து
கவிஞர்
வைரமுத்தும்
தேசிய
விருது
பெற்ற
கலைஞர்களுக்கு
பாராட்டு
தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான
அவரது
டிவிட்டில்,
திரைப்பட
தேசிய
விருது
பெறும்
அனைத்துக்
கலைஞர்களையும்
பாராட்டுகிறேன்.
சில
உன்னதக்
கலைஞர்கள்
விருது
பெறாமல்
போயிருக்கலாம்.
ஆனால்,
விருது
பெற்ற
அனைவரும்
உன்னதக்
கலைஞர்கள்.
எல்லார்க்கும்
என்
வளர்பிறை
வாழ்த்துக்கள்.
என
பதிவிட்டுள்ளார்.
|
ஜிவி பிரகாஷ்
இதேபோல் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் இரண்டாவது முறையாக தேசிய விருது பெறுவதற்கு வாழ்த்துகள் தனுஷ் என்று குறிப்பிட்டுள்ளார்.
|
உயரே உயரே பறக்கவேண்டும்
இதபோல் நடிகை மாளவிகா மோகனன், நடிகர்கள் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனுஷ் பெயரை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள டிவிட்டில், வாழ்த்துகள் தனுஷ், அசுரன் படம் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். நீங்கள் தகுதியானவர். நீங்கள் மேலும் உயரே உயரே பறக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
|
மாளவிகா மோகனன்
இதேபோல் நடிகை மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி பெயரை குறிப்பிட்டுள்ள டிவிட்டில் வழக்கம் போல் தமிழ் சினிமாவை பெருமைப்பட செய்துவிட்டீர்கள், வாழ்த்துகள் விஜய் சேதுபதி சார் என பதிவிட்டுள்ளார்.