twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமத்துப் பையன் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்.. காமன் டிபி-யை வெளியிட்ட பிரபலங்கள்!

    |

    சென்னை : தமிழ் சினிமாவின் சமத்துப் பையனாக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி சினிமாவில் ஜெயமுடன் திரை வாழ்க்கையை தொடங்கியவர்.

    தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயம் ரவி தமிழில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

    மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் காமன் டிபி-யை வெளியிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

     தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. ரிலீசானது ஜெயம் ரவியின் பூமி ஃபர்ஸ்ட் சிங்கிள்! தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.. ரிலீசானது ஜெயம் ரவியின் பூமி ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    குழந்தை நட்சத்திரமாக

    குழந்தை நட்சத்திரமாக

    பிரபல படத்தொகுப்பாளர் மோகனின் மகனும் பிரபல இயக்குனர் ராஜாவின் தம்பியுமான ஜெயம் ரவி தமிழ் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகம் ஆவதற்கு முன்பே தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

    வாய்ப்பை தேடி

    வாய்ப்பை தேடி

    கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கும் ஜெயம் ரவி, தந்தையின் அறிவுரையின் படி அவரது பெயரை எங்கும் பயன்படுத்தாமல் சினிமாவில் தனக்கென ஒரு வாய்ப்பை தேடிக் கொண்டு இருந்தவர்.

     தந்தை தயாரிக்க

    தந்தை தயாரிக்க

    அவ்வாறு வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்த ஜெயம் ரவி 2003 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார். மேலும் இந்த திரைப்படத்தை அவரது தந்தையும் படத்தொகுப்பாளருமான மோகன் தயாரிக்க அதை இவரது அண்ணன் இயக்குனர் ராஜா இயக்கியிருந்தார்.

    ஆரம்பமே அமர்க்களமாக

    ஆரம்பமே அமர்க்களமாக

    தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி அடைந்த ஜெயம் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்ததோடு மிகப்பெரிய வெற்றி பெற்று ஜெயம் ரவிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது. இந்நிலையில் ரவி என்ற தனது பெயர் ஜெயம் திரைப்படத்தில் நடித்ததிலிருந்து ஜெயம் ரவி என பலராலும் அடையாளப்படுத்தப்பட்டது.

    பெண் ரசிகைகள்

    பெண் ரசிகைகள்

    இவ்வாறு முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக ஜெயம் ரவிக்கு அமைந்த நிலையில் அதை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தொடர் வெற்றிகளை கைப்பற்றி தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். ஜெயம் திரைப்படத்தை தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் என தொடர் வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு பெண் ரசிகைகள் கூட்டமும் எக்கச்சக்கமாக உயரியது.

    சமத்துப் பையன்

    சமத்துப் பையன்

    இன்று வரை எந்த ஒரு கிசுகிசுகளிலும் சிக்காமல் தானுண்டு தனது வேலை உண்டு என திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ஜெயம்ரவியை திரைத்துறையினர் மட்டுமல்லாமல் மக்களும் சமத்துப் பையன் என கூறுவார்கள் அந்த அளவிற்கு ஜெயம் ரவி குட் பாயாக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    முதல் சவாலான திரைப்படம்

    முதல் சவாலான திரைப்படம்

    இவ்வாறு அனைவருக்கும் பிடித்த சிறந்த நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் தொடர் காதல் படங்களில் நடிப்பதை தவிர்த்து பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களையும் கதைகளையும் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தினார். அந்த வகையில் இவர் தேர்ந்தெடுத்து நடித்த முதல் சவாலான திரைப்படம் இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான பேராண்மை.

    இமேஜை உடைத்து

    இமேஜை உடைத்து

    இவ்வாறு லவ்வர் பாய் இமேஜில் இருந்து வெளியில் வந்த ஜெயம் ரவிக்கு அடுத்தடுத்து ஒருசில தோல்வி படங்கள் அமைந்தாலும் அதையெல்லாம் தாண்டி மீண்டும் தனது அண்ணன் ஜெயம் ரவியுடன் இணைந்து " தனி ஒருவன்" என்ற மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து, அதுவரை இவர்கள் இருவரும் தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக்கில் மட்டும்தான் வெற்றி கொடுப்பார்கள் என்று இருந்த இமேஜை உடைத்துக் காட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தனர்.

    முன்னணி நடிகராக

    முன்னணி நடிகராக

    தனி ஒருவன் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் உருவானது. தனி ஒருவன் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவியிடம் இருந்து ரசிகர்கள் பலரும் வித்தியாசமான திரைப்படங்களை எதிர்பார்த்து வந்த நிலையில் பூலோகம், நிமிர்ந்து நில், மிருதன், வனமகன் மற்றும் இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியான முதல் விண்வெளி திரைப்படமான டிக் டிக் டிக் உள்ளிட்ட வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தொடர் வெற்றிகளின் மூலம் இப்பொழுது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    கோமாளி

    கோமாளி

    சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "கோமாளி" திரைப்படம் கலகலப்பான காமெடி திரைப்படமாக மட்டுமல்லாமல் 90களில் வாழ்ந்த பழமையான நிகழ்வுகளை கருத்துக்களோடு பகிர்ந்து இருந்த இந்த திரைப்படம் மக்களை வெகுவாக கவர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி வாகை சூடிய நிலையில் கோமாளி திரைப்படத்தை தொடர்ந்து இவர் பூமி, ஜனகனமன மற்றும் பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுக்க தயாராக உள்ளார்.

    40வது பிறந்தநாள்

    40வது பிறந்தநாள்

    இவ்வாறு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம்ரவி செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று தனது 40வது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி இவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலரும் ஒன்றுகூடி வாழ்த்துக்களை தெரிவித்தும் காமன் டிபி-யை வெளியிட்டும் கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Celebrities wishes to Actor Jayam Ravi on his 40th Birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X