twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்... திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

    |

    சென்னை : நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

    தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் கலக்கி வரும் இவர் சமீபத்தில் உலக அளவில் மிகப் பிரபலமாக தூக்கி கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படமான பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

    எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பெயரும் புகழும் பெற்றுத் தரும் ஒப்பற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமைச் சிகிச்சை!டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமைச் சிகிச்சை!

     உலக புகழ்பெற்று

    உலக புகழ்பெற்று

    மிகச் சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்குள் வந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன், தனது 14 ஆம் வயதிலேயே நடித்த தொடங்கி இப்பொழுது உலகம் முழுவதும் மகிழ்மதியின் ராணி ராஜமாதா சிவகாமி தேவியாக புகழ்பெற்று உலக அளவில் பலருக்கும் பரிச்சயமாகி உள்ளார்.

    துணை கதாநாயகியாக

    துணை கதாநாயகியாக

    வெள்ளை மனசு, பலே மித்ருலு உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அறிமுகத்தை கொடுத்த நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத நிலையில் பல்வேறு திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்து வந்தார்.

    திருப்புமுனையாக

    திருப்புமுனையாக

    கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பேர் சொல்லும்பிள்ளை, விஜயகாந்த் நடிப்பில் வெளியான கேப்டன் பிரபாகரன் மற்றும் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான படிக்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களில் துணை நாயகி கதாப்பாத்திரத்தில் நடித்த இவருக்கு 1999 ஆம் ஆண்டு வெளியான "படையப்பா" மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

    அசராத வில்லி

    அசராத வில்லி

    இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருந்த இந்த திரைப்படத்தில் அசத்தலான வில்லி கதாபாத்திரத்தில் "நீலாம்பரி" என்ற பெயரில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு, அதன்பின் பல வருடங்களாக நீலாம்பரி என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார். அந்த அளவிற்கு நீலாம்பரி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போக அதன்பின் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றுவரை பெயர் சொல்லும் வகையில் நிலைத்து நிற்கிறது.

    அம்மன் வேடத்தில்

    அம்மன் வேடத்தில்

    இவ்வாறு கதாநாயகியாகவும் துணை நாயகியும் நடித்து வந்த ரம்யா கிருஷ்ணன் ஒருகட்டத்தில் தொடர்ந்து கடவுள் திரைப்படங்களில் அம்மன் வேடத்தில் நடித்து பலரையும் பக்தியில் ஆழ்த்தினார். அவ்வாறு இவர் அம்மன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த திரைப்படங்களான பொட்டு அம்மன், ராஜகாளியம்மன், நாகேஸ்வரி உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை மக்கள் மத்தியில் மிக எளிதாக கொண்டு சென்றதுடன் அனைவருக்கும் எளிதில் பரிச்சயமானார்.

    பஞ்சதந்திரம்

    பஞ்சதந்திரம்

    இவ்வாறு படையப்பா திரைப்படத்தில் வரும் நீலாம்பரி கதாபாத்திரம் இவருக்கு எவ்வாறு திருப்புமுனையாக அமைந்ததோ அதே போன்று கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான " பஞ்சதந்திரம் "திரைப்படத்தில் "மேகி" என்ற கதாபாத்திரமும் இவருக்கு பல பாராட்டுகளைப் பெற்று தந்தது.

    நடுவராக

    நடுவராக

    இவ்வாறு தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர் இந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு திரைப்படங்களின் மூலம் நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த ரம்யா கிருஷ்ணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய சீசனில் நடுவராக கலந்து கொண்டு பட்டையை கிளப்பி அந்த சீசன் முழுவதும் வேற லெவல் வைரலாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    அதிக வசூலை

    அதிக வசூலை

    இந்திய சினிமாவை உலக தரத்தில் கொண்டு சென்ற வெகு சில திரைப்படங்களில் சமீபத்தில் வெளியான பாகுபலிக்கு மாபெரும் பங்கு உள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடித்திருந்த பாகுபலி தற்போது நிலவரப்படி உலக அளவில் அதிக வசூலை ஈட்டி இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    கதாபாத்திரமே உயிர் பெற்று

    கதாபாத்திரமே உயிர் பெற்று

    அவ்வாறு பல்வேறு பெருமைகளும் சிறப்புகளும் பெயர் பெற்ற பாகுபலி திரைப்படத்தில் மகிழ்மதி என்ற சாம்ராஜ்யத்தின் ராணி ராஜமாதா சிவகாமி தேவி என்ற கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்க, பின் அந்த கதாபாத்திரமே உயிர் பெற்று வந்ததுபோல பலரும் ரம்யா கிருஷ்ணனை ராஜமாதா சிவகாமி தேவியாகவே பார்க்க இன்று வரை அவர் எங்கு போனாலும் ராஜமாதா சிவகாமி தேவி என்றே ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர்.

    50வது பிறந்த நாள்

    50வது பிறந்த நாள்

    இவ்வாறு நீலாம்பரி, மேகி, ராஜமாதா சிவகாமி தேவி என எண்ணற்ற பெயர் சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்து இந்தியாவில் தலைச்சிறந்த நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தனது 50 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சேர்ந்த பல நண்பர்களும், நடிகை நடிகைகளும் மற்றும் ரசிகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Celebrities wishes to Actress Ramya Krishnan on his 50th Birthday today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X