சுலக்சனாவிற்கு இன்று பிறந்தநாள்.. வாழ்த்திய பிரபலங்கள் !

சென்னை : குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய நடிகை சுலக்சனா இதுவரை 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

Recommended Video

பியா பாஜ்பாய் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சிக்கல்- வீடியோ

நடித்த பல்வேறு திரைப்படங்கள் வெள்ளிவிழா கொண்டாடிய நிலையில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜிடன் இவர் இணைந்து நடித்த "தூறல் நின்னு போச்சு" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய சுலக்சனா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதை ஒட்டி பல்வேறு திரை பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

450க்கும் மேற்பட்ட

450க்கும் மேற்பட்ட

தமிழ் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்ட வெகு சில நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை சுலக்சனா. தனது இரண்டரை வயதிலேயே நடிப்பு வட்டத்திற்குள் வந்தார். பல்வேறு மொழிகளில் நடித்து கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக இன்று வரை விளங்கி வருகிறார்.

கிருஷ்ணர் வேடத்தில்

கிருஷ்ணர் வேடத்தில்

தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி இணைந்து நடித்து இருந்த "காவியத் தலைவி" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கிருஷ்ணர் வேடத்தில் தோன்றி இருப்பார். பின் கதாநாயகியாக சந்திரமோகன் நடித்த "சுபோதயம்" என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

வெற்றி நாயகியாக

வெற்றி நாயகியாக

இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் இயக்கி நடித்திருந்த "தூறல் நின்னு போச்சு" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் மிகப்பிரபலமான சுலக்சனா பின் மிகப்பெரிய வெற்றி நாயகியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வலம் வந்தார். தூறல் நின்னு போச்சு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த திரைப்படம் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

ரசிகர்களை தனது நடிப்பின் மூலம் கவர்ந்து வந்த சுலக்சனா "சிந்து பைரவி" திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தார். இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்த சுலக்சனா ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், பாக்யராஜ் என பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து உள்ளார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

1980 மற்றும் 90களில் திரைப்படங்களில் சக்கைப்போடு போட்டு நடித்து வந்த சுலக்சனா இப்போது பல தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் மிக பிஸியாக நடித்து வருகிறார். இவ்வாறு தமிழ் சினிமாவில் ஒப்பற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சுலக்சனா செப்டம்பர் 1ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X