twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸுக்கு இன்று பிறந்தநாள்.. பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட சிறந்த 5 படங்கள் !

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்துக்கொண்டிருந்த இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் தனது ஒவ்வொரு படத்தின் மூலமும் வசூல் மழையை பொழிய வைத்து பல்வேறு சாதனைகளை புரிந்தவர்.

    விஜய், அஜித், ரஜினிகாந்த், விஜயகாந்த் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கி வந்த ஏ ஆர் முருகதாஸ் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் கலக்கி வருகிறார்.

    இந்நிலையில் செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாக்ஸ் ஆபீஸை அலறவிட்ட இவரின் சிறந்த 5 திரைப்படங்களைப் பற்றி இங்கு நாம் காண்போம்.

    பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்! பெண் போட்டியாளர்கள் லிஸ்ட் செமயா இருக்கு.. பசங்க சைடு வீக்கா இருக்கே.. பார்த்து பண்ணுங்க பிக்பாஸ்!

    மூன்றாவதாக 100 கோடி

    மூன்றாவதாக 100 கோடி

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய சிவாஜி மற்றும் எந்திரன் உள்ளிட்ட படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் 100 கோடியை வசூலித்து வந்த நிலையில், மூன்றாவதாக 100 கோடி வசூலித்த திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனராக ஏ ஆர் முருகதாஸ் ஆனார்.

    "தீனா"

    ரட்சகன் மற்றும் குஷி உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஏ ஆர் முருகதாஸ் அதைத்தொடர்ந்து அஜித் குமார் நடிப்பில் மாஸான ஆக்சன் திரைப்படமாக உருவான "தீனா" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். பல்வேறு தடைகளையும் தோல்விகளையும் தாண்டி தனது முதல் திரைப்படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸுக்கு "தீனா " மாபெரும் வெற்றித் திரைப்படமாக மாறியது.

    தல அஜித்

    தல அஜித்

    தீனா திரைப்படம் ஏ ஆர் முருகதாஸுக்கு மட்டுமல்லாமல் அஜித்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை காதல் திரைப்படங்களில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித் குமார் "தீனா" திரைப்படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத ஆக்சன் நாயகனாக நடித்து கலக்கி இருந்த நிலையில் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் அஜித் குமாருக்கு "தல" என்ற அடை மொழியும் உருவாக இன்று வரை ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் "தல அஜித்" என்றே அழைத்து வருகின்றனர்.

    விஜயகாந்த் நடிப்பில்

    விஜயகாந்த் நடிப்பில்

    தீனா திரைப்படத்தின் வெற்றியின் மூலம் தன்னை ஒரு வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திக் கொண்ட ஏ ஆர் முருகதாஸ் அதைத்தொடர்ந்து, கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் உருவான "ரமணா" என்ற மற்றுமொரு வெற்றி திரைப்படத்தை இயக்கி திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    வசூல் சாதனை

    வசூல் சாதனை

    விஜயகாந்த் அதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்தில் பார்த்த அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் மருத்துவத்துறையில் செய்யப்படும் கோல்மால்கள் உள்ளிட்டவைகளைப் பற்றி ஏ ஆர் முருகதாஸ் பேச ஆரம்பித்த முதல் திரைப்படம் ரமணா. இவ்வாறு விஜயகாந்த் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான ரமணா திரைப்படம் மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமாக அமைய இந்த திரைப்படமும் வசூல் சாதனை புரிந்தது.

    கஜினி

    கஜினி

    படத்தின் முதல் போஸ்டர் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு தொற்றிக் கொள்ள, "ஷார்ட் தி மெமரி லாஸ்" என்கிற ஒன்றை கையில் எடுத்து அதை கச்சிதமாக "கஜினி" படத்தில் செய்துகாட்டி இருப்பார் ஏ ஆர் முருகதாஸ். சூர்யா, அசின் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவான " கஜினி" திரைப்படம் சூர்யாவின் திரை வாழ்க்கையில் மற்றுமொரு திருப்புமுனையாக அமைந்த நிலையில் இத்திரைப்படத்தில் சூர்யா பலரும் எதிர்பார்த்திராத வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

    ஹிந்தியில் ரீமேக்

    ஹிந்தியில் ரீமேக்

    வித்தியாசமான ஹேர் ஸ்டைல் புதுமையான கதை என ரசிகர்களை புது அனுபவத்திற்கு கூட்டிச் சென்ற ஏ ஆர் முருகதாஸுக்கு இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைய, பின் இவரை பாலிவுட்டிற்கு கூட்டி சென்றாது. பாலிவுட்டில் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அமீர்கான் நடிப்பில் கஜினி என்ற பெயரிலேயே உருவாக பாலிவுட் ரசிகர்களிடமும் இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதோடு அங்கும் பல்வேறு வசூல் சாதனையை படைத்தது.

    முதன்முறையாக விஜய்யுடன்

    முதன்முறையாக விஜய்யுடன்

    இவ்வாறு ஹாட்ரிக் வெற்றிகளை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்தடுத்து திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் தொற்றிக்கொள்ள இவர் முதன்முறையாக விஜய்யுடன் இணைந்த "துப்பாக்கி" திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டிப் போட்டது.

    மாஸான காட்சிகள்

    மாஸான காட்சிகள்

    நாட்டுப்பற்று, விறுவிறுப்பான திரில்லர் காட்சிகள், அசர வைக்கும் சண்டைக் காட்சிகள், விஜய்க்கு உரித்தான மாஸான காட்சிகள் என அனைத்திலும் கலக்கி இருந்த ஏ ஆர் முருகதாஸுக்கு இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    மூன்றாவதாக 100 கோடி வசூல்

    மூன்றாவதாக 100 கோடி வசூல்

    பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன் மற்றும் சிவாஜி திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இருந்த நிலையில் அதில் மூன்றாவதாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய "துப்பாக்கி" திரைப்படம் இணைந்து சாதனை புரிந்தது. இந்த நிலையில் கஜினி திரைப்படத்தை ஹிந்தியில் இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் அதைத்தொடர்ந்து துப்பாக்கி திரைப்படத்தையும் "ஹாலிடே" என்ற பெயரில் அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கியிருந்தார்.

    கத்தி

    கத்தி

    ஏ.ஆர் முருகதாஸ் விஜய் கூட்டணி நன்றாக ஒர்க் அவுட்டாக மீண்டும் விஜய் உடன் இணைந்து "கத்தி" திரைப்படத்தை இயக்க இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார். ஜீவா, கதிரேசன் என இரண்டு கதாபாத்திரங்களின் மூலம் விவசாயிகளின் பிரச்சனைகளையும் ஓங்கி ஒலிக்கின்றவாறு உருவான " கத்தி" செம்ம ஷார்ப்பாக புகுந்து விளையாடி தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் விஜய்யின் திரை வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லாக அமைந்து இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது.

    பெருமைக்குரிய இயக்குனராக

    பெருமைக்குரிய இயக்குனராக

    இவ்வாறு கோலிவுட்டில் வெற்றி இயக்குனராகவும் வசூல் சக்கரவர்த்தியாகவும் வலம் வரும் ஏ ஆர் முருகதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரைப் பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இவர் இயக்கிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்று தமிழ்சினிமாவின் பெருமைக்குரிய இயக்குனராக ஏ ஆர் முருகதாஸ் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    English summary
    Celebrities wishes to Director AR Murugadoss Birthday Today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X