வெற்றி இயக்குனருக்கு இன்று பிறந்தநாள்... அட்லி இயக்கிய சிறந்த 4 படங்கள்!

சென்னை : தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லி இப்பொழுது பாலிவுட்டிலும் தனது காலடி பதிக்க உள்ளார்.

தொடர்ந்து விஜய் திரைப்படங்களை இயக்கி பல வசூல் சாதனைகளை புரிந்து வரும் அட்லியின் திரைப்படங்கள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும் மிகச்சிறந்த வசூல் சாதனையையும் புரிந்து வருகிறது.

இந்நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இவர் இயக்கிய நான்கு சிறந்த திரைப்படங்களை பற்றி இங்கு நாம் காண்போம்.

முதல் திரைப்படம்

முதல் திரைப்படம்

இயக்குனர் அட்லி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக எந்திரன், நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியதை தொடர்ந்து ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான "ராஜா ராணி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். காதலை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த "ராஜா ராணி" திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நிலையில் தனது முதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக இவருக்கு அமைந்தது.

தெறி

தெறி

"ராஜா ராணி" வெற்றியை தொடர்ந்து இவர் அறிவித்த செய்தி கோலிவுட்டையே அதிரச் செய்தது. தென்னிந்தியாவின் வசூல் மன்னன் என அழைக்கப்பட்டு வரும் விஜய்யுடன் தனது இரண்டாவது திரைப்படத்தில் இயக்க இருப்பதை அந்த செய்தி. விஜய்யின் தீவிர ரசிகரான அட்லி விஜய்யை தனது இரண்டாவது திரைப்படத்திலேயே இயக்க வாய்ப்பு கிடைக்க "தெறி " என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கி இரண்டாவது திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற முத்திரையை பதித்தார். விஜய்யை எவ்வாறு எல்லாம் திரையில் காண வேண்டும் என நினைத்தாரோ அதேபோல் தெறி உருவாகியிருப்பார். இந்தத் திரைப்படம் இன்றளவும் வசூலில் முன்னணியிலும் சிறந்த திரைப்படம் என்ற பாராட்டுக்களையும் பெற்று வருவதோடு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

விஜய் மூன்று கதாபாத்திரத்தில்

விஜய் மூன்று கதாபாத்திரத்தில்

முதல் இரண்டு வெற்றிகளை கொடுத்த அட்லி தனது அடுத்த படத்திலும் விஜய்யுடன் இணைய விஜய் மூன்று கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார். கிராமத்து போராளி, டாக்டர், மெஜிசியன் என மூன்று கதாபாத்திரங்களில் "மெர்சல்" திரைப்படத்தில் விஜய் கலக்கி இருக்க இந்த திரைப்படமும் வசூலில் சக்கை போடு போட்டு திரையரங்குகளில் பல நாட்கள் ஓடி வசூல் சாதனை புரிந்தது.

பெண்கள் கால்பந்து

பெண்கள் கால்பந்து

இவ்வாறு தொடர் வெற்றிகளை குவித்து வந்த அட்லி தனது நான்காவது திரைப்படத்தையும் விஜய்யை வைத்து இயக்க கோலிவுட்டே செய்வதறியாது திகைத்து நிற்க பலரும் எதிர்பார்க்காத பெண்கள் கால்பந்து விளையாட்டு என்ற ஒன்றை கையிலெடுத்து அதைப் பலரும் ரசிக்கின்ற வகையில் மிகச் சிறந்த முறையில் கையாண்டு அனைவருக்கும் தீபாவளி பரிசாக வெளியாகியிருந்த இந்த "பிகில்" திரைப்படம் மற்றுமொரு வெற்றி படமாக அட்லி விஜய் கூட்டணியில் இணைந்தது. ராயப்பன் மற்றும் மைக்கேல் என இரு கதாபாத்திரத்தில் விஜய் கலக்கி இருக்க அனைவரின் பாராட்டுகளையும் பெற்று இந்த திரைப்படமும் வசூல் சாதனை புரிந்து மாபெரும் வெற்றி பெற்றது.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika
பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு அட்லி தான் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களின் மூலம் தான் ஒரு வெற்றி இயக்குனர் என தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வரும் நிலையில் இப்பொழுது நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஒரு ஹிந்தி திரைப்படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் செப்டம்பர் 21 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இந்திய திரைப்படத் துறையில் உள்ள பல்வேறு திரைப் பிரபலங்கள் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X