சில்லுக்கருப்பட்டி இயக்குனர் ஹலிதா ஷமீம்-க்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து !

சென்னை : இப்பொழுது தமிழ் திரையுலகினர் இடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

சமீபத்தில் இவர் இயக்கிய சில்லுக்கருப்பட்டி திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தி பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் இது உலக அளவில் பல்வேறு அங்கீகாரங்களையும் வென்று வருகிறது.

சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கி வரும் ஏலே மற்றும் மின்மினி உள்ளிட்ட திரைப்படங்கள் திரையுலகினர் இடையே மிகப்பெரிய கவனத்தை பெற்று வரும் நிலையில் செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று இயக்குனர் ஹலிதா சமீம் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி கொண்டாடி வருகின்றனர்.

தனி இடத்தை பிடித்து

தனி இடத்தை பிடித்து

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் வெகுசில பெண் இயக்குனர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வெற்றி வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.

உதவி இயக்குனராக

உதவி இயக்குனராக

விக்ரம் வேதா என்ற மெகாஹிட் திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இயக்கிய "ஓரம் போ" திரைப் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஹலிதா சமீம் இயக்குனர் மிஷ்கினிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

பூவரசம் பீப்பி

பூவரசம் பீப்பி

இவ்வாறு உதவி இயக்குனராக பிரபலமான இயக்குனர்களிடம் பணியாற்றிய ஹலிதா ஷமீம் "பூவரசம் பீப்பி" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் தனது காலடியை பதித்தார்.

இரண்டாவது திரைப்படமான

இரண்டாவது திரைப்படமான

யதார்த்தமான கதை, தத்ரூபமான காட்சியமைப்பு, என பார்க்கும் அனைவரையும் சிலிர்க்கவைக்கும் இவரது படங்கள் பெயர் சொல்லும் வகையில் பல்வேறு விருதுகளையும் குவித்து வருகிறது. முழுக்க முழுக்க சிறுவர்களை வைத்து இயக்கிய "பூவரசம் பீப்பி" இவருக்கு தனித்துவமான இயக்குனர் என்ற அங்கீகாரத்தை கொடுத்த நிலையில் இவரது இரண்டாவது திரைப்படமான "சில்லுக் கருப்பட்டி" உலக அரங்கில் இன்றுவரை திரையிடப்பட்டு பல்வேறு விழாக்களில் கௌரவிக்கப்பட்டு வருகிறது.

சில்லுக் கருப்பட்டி

சில்லுக் கருப்பட்டி

நான்கு வித்தியாசமான காதல் கதைகள், அனைத்திலும் வெவ்வேறு வயதை சார்ந்த காதலர்கள் என காதலை முழுக்க முழுக்க மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த "சில்லுக் கருப்பட்டி" திரைப்படம் வெளியானது முதல் இன்றுவரை பல விருதுகளை குவித்து வருவதோடு தமிழ் சினிமாவை உலக அரங்கில் கௌரவப்படுத்தி வருகிறது.

பாராட்ட வைத்துள்ளது

பாராட்ட வைத்துள்ளது

சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தை ஹலிதா சமீம் இயக்கிய இருந்த நிலையில் இந்த திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் வெளியிட்டிருந்தது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களை மட்டுமல்லாமல் திரையுலகினரையும் பாராட்ட வைத்துள்ளது.

காத்துக் கொண்டிருக்கிறது

காத்துக் கொண்டிருக்கிறது

இயக்குனர் ஷங்கர் மற்றும் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களும் இந்த திரைப்படத்தை பாராட்டி வரும் நிலையில் ஹலிதாவின் அடுத்தடுத்த உருவாகி வரும் திரைப்படங்களான ஏலே மற்றும் மின்மினி உள்ளிட்ட திரைப்படங்களின் வெளியீட்டுக்காக திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டாம் பாதி

இரண்டாம் பாதி

மேலும் இவர் அடுத்து இயக்கி வரும் "மின்மினி" என்ற திரைப்படத்தின் முதல் பாதி ஏற்கனவே 2015ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக இருக்கும் இரண்டாம் பாதி இந்த ஆண்டு படப்பிடிப்பில் உள்ளது.

நான்காண்டுகள் காத்திருந்து

நான்காண்டுகள் காத்திருந்து

சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்த அதே நடிகர்களை நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கொஞ்சம் வளர்ந்தபின் அமைவதாக இருக்கும் இந்த கதையில் அதற்காக நான்காண்டுகள் காத்திருந்து இப்பொழுது இந்த திரைப்படத்தை எடுத்து வருவது திரையுலகினர் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதோடு பலர் இது புதுமையானது என பாராட்டியும் வருகின்றனர்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் திரையுலகினரையும் ரசிகர்களையும் மிகுந்த எதிர்பார்ப்பில் ஆழ்த்தி இருக்கும் மிகச் சிறந்த பெண் இயக்குனரான இயக்குனர் ஹலிதா சமீம் செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் நண்பர்கள் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X