twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் பி.வாசுக்கு இன்று பிறந்தநாள்.. விஐபிக்கள் வாழ்த்து !

    |

    சென்னை : தென்னிந்தியாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் பி வாசு தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி என பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி இந்திய அளவில் அனைவருக்கும் பரிச்சயமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இயக்கிய சின்னத்தம்பி, சந்திரமுகி, வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட திரைப்படங்கள் இன்றளவும் தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளி பல நாட்கள் திரையில் ஓடிய திரைப்படங்கள் என்ற பெருமையை பெற்றுள்ளது.

    இவ்வாறு தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பி வாசு செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

     டிசம்பரில் பெரிய அறிவிப்பா? அதுவா இருக்குமோ.. சிம்புவின் ஒத்த வார்த்தை.. தூக்கத்தை தொலைத்த ஃபேன்ஸ்! டிசம்பரில் பெரிய அறிவிப்பா? அதுவா இருக்குமோ.. சிம்புவின் ஒத்த வார்த்தை.. தூக்கத்தை தொலைத்த ஃபேன்ஸ்!

    பல மொழிகளில்

    பல மொழிகளில்

    ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களை இயக்கியிருந்த பி வாசு தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை இயக்கி அங்கும் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்து மிகப் பிரபலமாக உள்ளார்.

    உதவி இயக்குனராக

    உதவி இயக்குனராக

    மூத்த இயக்குனர் சி வி ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பி வாசு, பின் இயக்குனரும் நடிகருமான சந்தானபாரதி இடம் பன்னீர் புஷ்பங்கள், மெல்ல பேசுங்கள், நீதியின் நிழல் உள்ளிட்ட திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

    தொட்டதெல்லாம் வெற்றி

    தொட்டதெல்லாம் வெற்றி

    இவ்வாறு பல வெற்றித் திரைப்படங்களில் பணியாற்றிய பி வாசு 1986இல் "கதாநாயகன்" என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தொட்டதெல்லாம் வெற்றி என்பது போல இவர் இயக்கிய படங்கள் தொடர்ந்து வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழில் "என் தங்கச்சி படிச்சவ" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக காலடியை பதித்தார்.

    அதிக நாட்கள் ஓடி

    அதிக நாட்கள் ஓடி

    நடிகர் பிரபுவின் நடிப்பில் உருவான " என் தங்கச்சி படிச்சவ" திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அதை தொடர்ந்து பிள்ளைக்காக, பொன்மனச்செல்வன், வாத்தியார் வீட்டு பிள்ளை, பணக்காரன், வேலை கிடைச்சிடுச்சு, என இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வர, தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கூட்டணியாக பலராலும் பாராட்டப்பட்டு வரும் சத்யராஜ் கவுண்டமணி கூட்டணியில் உருவான "நடிகன் " திரைப்படம் வெளியாகி அந்த ஆண்டு அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையும் பெற்று "நடிகன்" மிகப்பெரிய வெற்றி பெற்றது.

    காணாத ஒரு கதையாக

    காணாத ஒரு கதையாக

    நடிகன் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை இயக்கிய பி வாசு அதைத்தொடர்ந்து பிரபுவை வைத்து சின்னத்தம்பி என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த திரைப்படமும் ஓராண்டை கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்தது. திரையிட்ட இடத்திலெல்லாம் சின்னத்தம்பி வெற்றிகரமாக ஓட முக்கியமான காரணம் அந்த திரைப்படத்தின் கதை, இதுவரை தமிழ் ரசிகர்கள் காணாத ஒரு கதையாக சின்னதம்பி உருவாகியிருக்க அது ரசிகர்களை கவர்ந்ததோடு மாபெரும் வெற்றி பெற்றது.

    மிரட்டும் வில்லனாக

    மிரட்டும் வில்லனாக

    இவ்வாறு வெற்றி இயக்குனராக வலம் வந்த பி வாசு விஜயகாந்த் நடித்த " வல்லரசு" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவ்வாறு நடிகராக அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே மிரட்டும் வில்லனாக நடித்திருந்த வாசுவின் நடிப்பை பார்த்து பலரும் பாராட்டிய நிலையில் அவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

    வரலாறு படைத்தது

    வரலாறு படைத்தது

    2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா மற்றும் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் மிகச்சிறந்த ஹாரர் மற்றும் காமெடி கலந்த திரைப்படமாக உருவான சந்திரமுகியை இயக்கி கிட்டத்தட்ட 890 நாட்களுக்கு மேல் ஓடி தென்னிந்திய சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற மற்றும் ஒரு வரலாறு படைத்தது.

    பிறந்தநாள்

    பிறந்தநாள்

    இவ்வாறு தென்னிந்திய சினிமாவின் ஆஸ்தான வெற்றி இயக்குனராக இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் பி.வாசு செப்டம்பர் 15-ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    English summary
    Celebrities wishes to Director P Vasu on his 66th Birthday Today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X