இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்று பிறந்தநாள்.. கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னை : அனைவரும் ரசிக்கும் கதைக்களம் புதுமையான காமெடி காட்சிகள் என தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து செல்வார்.

இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை ஒட்டி இவரது ரசிகர்கள் பலரும், மற்றும் திரைப் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

காதல் கதைகளை

காதல் கதைகளை

சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக மிகப் பிரபலமாக உள்ள விக்னேஷ் சிவன் இளசுகளுக்கு பிடிக்கின்றவாறு காதல் கதைகளை கலகலப்பான காமெடியுடன் கலந்து எடுப்பதில் வல்லவர்.

போடா போடி

போடா போடி

சிவி உள்ளிட்ட திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் அதில் ஒரு சில காட்சிகளில் வந்தும்
செல்வார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வெளியான " போடா போடி" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இப்பொழுது அனைவரும் விரும்பும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

போடா போடி திரைப்படம் காதலர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "வேலையில்லா பட்டதாரி " திரை படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கியிருப்பார்.

கடைசியில் உருவானது

கடைசியில் உருவானது

இந்நிலையில் தனது இரண்டாவது திரைப்படத்தை இயக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து அனைத்தும் தோல்வியில் முடிய பின் மீண்டும் விஜய் சேதுபதி இடமே இந்த கதை சேர கடைசியில் உருவானது தான் நானும் ரவுடி தான்.

ரசிகர்களின் ஃபேவரிட்

ரசிகர்களின் ஃபேவரிட்

விஜய்சேதுபதி, நயன்தாரா, ஆர் ஜே பாலாஜி, ஆனந்தராஜ் ஆகிய நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவான "நானும் ரவுடி தான்" அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக நாட்கள் ஓடி ரசிகர்களின் ஃபேவரிட் திரைப்படமாக கொண்டாடப்பட்டது.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

நடிகர் தனுஷ் தயாரித்திருந்த நானும் ரவுடி தான் திரைப்படம் இப்பொழுது இருக்கும் இளசுகளுக்கு பிடிக்கின்றவாறு எதார்த்தமான காதல் கதை, ஆர் ஜே பாலாஜியின் டைமிங் காமெடி நயன்தாராவின் வெகுளியான நடிப்பு விஜய் சேதுபதியின் ஸ்கிரீன் பிரசன்ஸ் என அனைத்திலும் சிறப்பாக அமைய இந்த திரைப்படம் மேலும் ஒரு படி மேலே போய் அனைத்து மொழியினரும் ரசிக்கும் வகையில் மாபெரும் வெற்றி பெற்றது.

மிகப் பெரிய பலமாக

மிகப் பெரிய பலமாக

நானும் ரவுடி தான் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் விக்னேஷ் சிவனே எழுதி இருக்க அதற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படப் பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

இவ்வாறு நானும் ரவுடிதான் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ரசிகர்கள் பலரும் விக்னேஷ் சிவனின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பு எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் பொழுது சூர்யாவுடன் இணைந்து "தானா சேர்ந்த கூட்டம்" என்ற மற்றுமொறு பிளாக்பஸ்டர் மூவியை கொடுத்து ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

நட்சத்திர ஜோடிகள்

நட்சத்திர ஜோடிகள்

இவ்வாறு தொடர் வெற்றி படங்களின் மூலம் இளசுகளின் ஃபேவரிட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன் "நானும் ரவுடி தான்" படப்பிடிப்பின் போது நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் இன்று வரை தொடர்ந்து வர, இந்த நட்சத்திர ஜோடிகள் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்து அந்த புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட தொடர்ந்து வைரலாகி வருகிறது.

கோவா சென்று

கோவா சென்று

சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஓணம் பண்டிகைக்கு கேரளா சென்று வந்த புகைப்படங்கள் மற்றும் விக்னேஷ் சிவனின் தாயார் பிறந்த நாளுக்கு கோவா சென்று பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் என லாக் டவுனிலும் இந்த நட்சத்திர ஜோடி தொடர்ந்து வைரலானார்கள்.

தானே பாடல்களை எழுதி

தானே பாடல்களை எழுதி

இவ்வாறு வெற்றி இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விக்னேஷ் சிவன் ஒரு சிறந்த பாடல் ஆசிரியரும் கூட. தான் இயக்கும் திரைப்படங்களில் தானே பாடல்களை எழுதும் பழக்கத்தை கொண்ட விக்னேஷ் சிவன் அதேசமயம் ரெமோ, கோலமாவு கோகிலா, மாஸ்டர், நம்ம வீட்டு பிள்ளை மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

மீண்டும் விஜய் சேதுபதி

மீண்டும் விஜய் சேதுபதி

தானா சேர்ந்த கூட்டம் வெற்றிக்குப் பிறகு இயக்க உள்ள திரைப்படமான "காத்துவாக்குல இரண்டு காதல்" திரைப்படத்தில் மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்ற அதில் நடிகை சமந்தா புது வரவாக இணைந்துள்ளார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு "காத்துவாக்குல ரெண்டு காதல்" திரைப்படத்தின் அப்டேட்டை கோலிவுட்டே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X