சிவகார்த்திகேயனின் டான் படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ்... பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன் உள்ளிட்டவர்களின் நடிப்பில் சென்ற மாதம் வெளியான டாக்டர் படம் அவருக்கு சிறப்பான வகையில் கைக்கொடுத்துள்ளது. இந்தப் படம் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டாக்டர் பிரம்மாண்ட வெற்றி

டாக்டர் பிரம்மாண்ட வெற்றி

இந்தப் படம் திரையிடப்பட்ட அரங்குகளில் எல்லாம் ரசிகர்களின் வெகுவான வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடியது. இந்தப் படத்தை தொடர்ந்து அண்ணாத்த படம் திரையரங்குகளில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்தாலும் முன்னதாக திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் ரிலீஸ் செய்யப்பட்டு டாக்டர் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

டான் படம்

டான் படம்

இந்நிலையில் டாக்டர் படத்திற்கு அடுத்ததாக தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக அவர் நடித்துள்ளார். சில காட்சிகளில் பள்ளி மாணவராகவும் அவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிவா தயாரிப்பு

சிவா தயாரிப்பு


லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். படத்தில் அவருக்கு மீண்டும் ஜோடியாகியுள்ளார் பிரியங்கா மோகன். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.

பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

பர்ஸ்ட் லுக் ரிலீஸ்

இந்தப் போஸ்டர் வித்தியாசமாக காணப்படுகிறது. காமெடி அலப்பறையாக இந்தப் படம் இருக்கும் என்பது படத்தின் போஸ்டரை பார்க்கும்போதே தெரிகிறது. சிவகார்த்திகேயன் படங்களில் காமெடிக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். அந்தவகையில் இந்தப் படமும் காமெடி கலாட்டாவாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

டைரக்டர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசையமைப்பை அனிருத் மேற்கொண்டுள்ளார். மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு அனிருத், சூரி, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் படம் வெற்றி பெறவும் வாழ்த்தியுள்ளனர். சூரி செம்ம லுக் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X