கேட்கவே வருத்தமாக உள்ளது... விரைவில் மீண்டு வாருங்கள்.. நடிகர் கமல் நலம்பெற பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் விரைவில் நலம் பெற வேண்டும் என திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Kamal Hassan -கு கொரோனா தொற்று உறுதி | Bigg Boss 5 Tamil, Isaivani

நடிகர் கமல்ஹாசன் கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தார். சிகாகோவில் தனது கதர் பிராண்டை அறிமுகம் செய்யும் விழாவில் பங்கேற்ற கமல் அடுத்த ஓரிரு நாட்களிலேயே சென்னை திரும்பினார்.

வெளிநாடு சென்றிருந்த கமல், தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

தொடர்ந்து விஜய் டிவியில் தான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை பங்கேற்றார். இந்நிலையில் லேசான இருமல் இருந்ததால் மருத்துவ பரிசோதனைக்கு சென்றார் நடிகர் கமல்ஹாசன்.

கமலுக்கு சிகிச்சை

கமலுக்கு சிகிச்சை

அதில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலை சாதாரணமாக உள்ளது

உடல்நிலை சாதாரணமாக உள்ளது

மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், கமலுக்கு சுவாச பாதை தொற்று மற்றும் காய்ச்சல் உள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இருப்பினும் அவரது உடல்நிலை சாதாரணமாக உள்ளது என்றே மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

பிரபலங்கள் வாழ்த்து

அதாவது அவரது உடல்நிலையில் பயப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லை என்றே மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என டிவிட்டரில் வாழ்த்து கூறி வருகின்றனர்.

குணமடைய வாழ்த்துகிறேன்

குணமடைய வாழ்த்துகிறேன்

அந்த வகையில் நடிகர் சரத்குமார் பதிவிட்டுள்ள டிவிட்டில் நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்... விரைவில் நலம் பெறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் நலம் பெறுங்கள்

விரைவில் நலம் பெறுங்கள்


இதேபோல் நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமா நடிகை ஸ்ரீபிரியாவும் நடிகர் கமல்ஹாசன் நலம் பெற வேண்டி டிவிட்டியுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் விரைவில் நலம் பெறுங்கள் சார்... டேக் கேர் என பதிவிட்டுள்ளார்.

கேட்க வருத்தமாக உள்ளது

கேட்க வருத்தமாக உள்ளது

இதேபோல் நடிகையும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பங்கேற்றவருமான நடிகை சனம் ஷெட்டியும் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், இதை கேட்க வருத்தமாக உள்ளது.. நீங்கள் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன் சார் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X