பிரபலங்களின் வாழ்த்து மழையில் தனுஷின் கர்ணன்.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: தனுஷின் கர்ணன் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

KARNAN FDFS | Mari Selvaraj, Dhanush, Fans Celebration, Karnan Public Review

பரியேறும் பெருமாள்' மாரி செல்வராஜ் இயக்கிய தனுஷின் 41 வது திரைப்படம் 'கர்ணன்'. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

'கர்ணன்' படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்தில் தனுஷ், ராஜீஷா விஜயன், லால், அழகம் பெருமாள், லட்சுமிப்ரியா சந்திரமெளலி, யோகி பாபு, நடராஜன் சுப்பிரமணியம் கெளரி கிஷன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று ரிலீஸ்

இன்று ரிலீஸ்

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று கர்ணன் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. கர்ணன் படத்தை காண காலையிலேயே ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு விட்டனர்.

இயக்குநர் பா ரஞ்சித்

இயக்குநர் பா ரஞ்சித்

கர்ணன் ரிலீஸை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பா ரஞ்சித் பதிவிட்டுள்ள டிவிட்டில் கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். வியக்கதக்க திரைமொழியில் தனுஷின் அபாரமான நடிப்பபில் இசை சந்தோஷ் நாராயணன் மற்றும் &அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைபாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கு நன்றிகள்! கொண்டாடுவோம்! என பதிவிட்டுள்ளார்.

நடிகை ஆர்த்தி

நடிகை ஆர்த்தி

இதேபோல் நடிகை ஆர்த்தி தனது கணவர் கணேஷுடன் காலையிலேயே முதல் நாள் முதல் ஷோவை பார்த்து ரசித்துள்ளார். தான் திரையரங்கில் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ள ஆர்த்தி படம் பெரும் வெற்றி பெற தனுஷ் சாருக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி

சுரேஷ் காமாட்சி

இதேபோல் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ள டிவிட்டில் காண வரச் சொல்லியிருக்கான் #கர்ணன் ஐம்பது சதவீத திரையரங்க அனுமதியை முழுமையாய் நிரப்பி நூறு நாட்கள் ஓட வைக்க களமிறங்குவோம். வெற்றிக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X