ஹேப்பி பர்த் டே டூ யூ.. சிவகார்த்திகேயன், டிடி.. குவியும் வாழ்த்துகள்!

Recommended Video

Doctor Official First Look Released | Sivakarthikeyan | Nelson | Priyanka Mohan

சென்னை : இன்று பல திரைபிரபலங்கள் தங்களது பிறந்த நாளை கொண்டாடு கின்றனர். ரசிகர்கள் மற்றும் திரைதுறை சார்ந்தவர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரையில் இருந்து வந்து வெள்ளித்திரையில் வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். தனது ரசிகர்களால் செல்லமாக எஸ்கே என்று அழைக்கப்படுபவர். ரஜினி, விஜய் அடுத்து சிவகார்த்திகேயன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து உள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவகார்த்திகேயன் என்றால் அனைவருக்கும் பிடித்தமான நடிகர்.

 celebrity birthday today

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து ஹீரோவாக உயர்ந்தவர். தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கி வருகிறார். தமிழ் சினிமாவி்ன் சீமராஜாவிற்கு இன்று பிறந்த நாள் இதனை அடுத்து அவரது ரசிகர்கள் திரையுலக நண்பர்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவரும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று வெற்றி பெற்றவர் ரியோ. இவரும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னாளில் ஹீரோ ஆனவர். சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்தார். இவர் நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஒடு ராஜா திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

 celebrity birthday today

ரியோவுக்கு இன்று பிறந்த நாள் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை ரியோ ஹீரோவாக நடித்த படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்தார்.

ரசிகர்களால் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் திவ்யா தர்ஷினி. சீரியல்களில் நடிக்க துவங்கிய டிடி. அவர் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் அவரை மக்களின் மனதில் கொண்டு சென்ற கதாபாத்திரங்கள் குறிப்பாக ராதிகா சரத்குமார் தயாரித்த செல்வி மற்றும் அரசி சீரியல்களில் மிகவும் பிரபலமானவை.

 celebrity birthday today

பின் தமிழ் தொலைக்காட்சியில் மிக முக்கியமான தொகுப்பாளினியாக மாறினார் டிடி. இவர் தொகுத்து வழங்கிய காபி வித்து டிடி நிகழ்ச்சி மிகவும் பேசப்பட்டது. மேலும், ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கியது டிடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று டிடிக்கு பிறந்த நாள் இதனை அடுத்து ரசிகர்கள் திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X