CCL 2026: ஜல்லிக்கட்டு காளைகள் மாதிரி மிரட்டி விளையாடுங்க.. சென்னை கிங்ஸ்க்கு ஐசரி கணேஷ் வாழ்த்து
சென்னை: ஐபிஎல் தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளது. அதே நேரத்தில் மகளிர் பிரீமியர் லீக் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகளே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடங்கவுள்ளது. அதாவது, வரும் 16ஆம் தேதி 12 வது சீசன் தொடங்கவுள்ளது. இப்படி இருக்கையில், சென்னை ரைனோஸ் அணியை வாங்கி உள்ள தயாரிப்பாளர் வேல்ஸ் ஐசரி கணேஷ் அணியின் பெயரை சென்னை கிங்ஸ் என்று மாற்றி உள்ளார். மேலும் சென்னை கிங்ஸ் அணியில் களமிறங்கும் செலிபிரிடிட்டிகளை அழைத்து, அவர்களுடன் பொங்கல் கொண்டாடி, சிறப்பாக விளையாட வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை கிங்ஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தே ஷேர் மற்றும் போஜ்புரி தபங்க்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் களமிறங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் இம்முறை ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோப்பையை வென்ற அணிகளைப் பொறுத்தவரையில் இந்த 8 அணிகளில் 6 அணிகள் கோப்பையை வென்றுள்ளது. அதாவது, இதுவரை சென்னை அணி மொத்தம் இரண்டு முறை கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால் மொத்தம் ஐந்து முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. அதேபோல், தெலுங்கு வாரியர்ஸ் அணி தொடர்ந்து மூன்று முறையும் மொத்தம் நான்கு முறையும் கோப்பையை தன்வசப்படுத்தி உள்ளது. அதேபோல் கர்நாடகா அணி இரண்டு முறையும், மும்பை அணி ஒரு முறையும், பெங்கால் அணி ஒருமுறையும் என மொத்தம் 6 அணிகள் கோப்பையை தங்கள் வசப்படுத்தி உள்ளன. இன்னும் கோப்பையை வெல்லாத அணிகள் என்றால் அது கேரளா ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் போஜ்புரி தபங்க்ஸ் அணிகள் மட்டும் தான். போட்டிகளுக்கான டிக்கெட்டிற்கு இங்கு கிளிக் செய்யவும்
வாழ்த்து: இந்நிலையில் சென்னை அணியை வாங்கியுள்ள வேல்ஸ் ஐசரி கணேஷ் சென்னை கிங்ஸ் அணியை சேர்ந்த செலிபிரிட்டிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடி உள்ளார். மேலும் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி கோப்பையை நமதாக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு காளைகள் போல விளையாட வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை ஐசரி கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சென்னை கிங்ஸ் அணிக்கு வரும் 18ஆம் தேதியில் இருந்து போட்டிகள் தொடங்குகிறது. இம்முறை மதுரையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.



Click it and Unblock the Notifications











