CCL 2026: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.. சென்னை அணியின் பெயரை மாற்றிய புது ஓனர்!
சென்னை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி கவனம் இருந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 11 முறை இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு 12வது சீசனாக தொடங்கவுள்ளது. இம்முறை மொத்தம் 8 அணிகள் களமிறங்க உள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் களமிறங்காத மலையாள சினிமா அணி இம்முறை களமிறங்குகிறது.
அதாவது மும்பை ஹீரோஸ், சென்னை கிங்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் தே ஷேர் மற்றும் போஜ்புரி தபாங்க்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் களமிறங்கவுள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியை வீழ்த்திவிட்டு, பஞ்சாப் தே ஷேர் அணி தனது முதல் கோப்பையை வென்றது.

புது பெயர்: இதுவரை சென்னை ரைனோஸ் அணி மொத்தம் இரண்டு முறை கோப்பைகளை வென்றுள்ளது. இம்முறை போட்டிகள் தமிழ்நாட்டில் மதுரையிலும் நடைபெறவுள்ளது. சென்னை ரைனோஸ் அணியை வேல்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டதால் அதற்கு சென்னை கிங்ஸ் என்று பெயர் சூட்டி உள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











