CCL 2026: மதுரையை குலுங்க வைக்க வரும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்.. சென்னைக்கு எப்போது மேட்ச்?
மதுரை: செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி கவனம் இருந்து வருகிறது. அந்த வகையில் இதுவரை 11 முறை இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு 12வது சீசனாக தொடங்கவுள்ளது. இம்முறை மொத்தம் 8 அணிகள் களமிறங்க உள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் களமிறங்காத மலையாள சினிமா அணி இம்முறை களமிறங்குகிறது.
அதாவது மும்பை ஹீரோஸ், சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் தே ஷேர் மற்றும் போஜ்புரி தபாங்க்ஸ் என மொத்தம் எட்டு அணிகள் களமிறங்கவுள்ளது. கடந்த முறை இறுதிப் போட்டியில் சென்னை ரைனோஸ் அணியை வீழ்த்திவிட்டு, பஞ்சாப் தே ஷேர் அணி தனது முதல் கோப்பையை வென்றது.

கோப்பையை வென்ற அணிகள்: இதுவரை சென்னை ரைனோஸ் அணி மொத்தம் இரண்டு முறை கோப்பைகளை வென்றுள்ளது. அதேபோல், தெலுங்கு வாரியர்ஸ் அணி மொத்தம் நான்கு முறை கோப்பையை தன்வசப்படுத்தி உள்ளது. இது மட்டும் இல்லாமல், தொடர்ந்து மூன்று முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதேபோல் கர்நாடகா அணி இரண்டு முறையும், மும்பை அணி ஒரு முறையும், பெங்கால் அணி ஒருமுறையும் என மொத்தம் 6 அணிகள் கோப்பையை தங்கள் வசப்படுத்தி உள்ளன. இன்னும் கோப்பையை வெல்லாத அணிகள் என்றால் அது கேரளா ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் போஜ்புரி தபங்க்ஸ் அணிகள் மட்டும் தான்.

சென்னைக்கு மேட்ச்: இம்முறை போட்டிகள் முழுக்க முழுக்க தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா என மொத்தம் மூன்று மாநிலங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதலில் தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் போட்டிகள் தொடங்குகிறது. அதன் பின்னர் மைசூர், அதன் பின்னர் ஹைதராபாத் என மூன்று இடங்களில் நடைபெற உள்ளது. அதேபோல் ஹைதராபாத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை அணி வரும் 16ஆம் தேதி கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த தொடர் வரும் 16ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை வேல்ஸ் ஐசரி கணேஷ் சென்னை ரைனோஸ் அணிக்கு ஸ்பான்சராக செயல்படுகிறார்.


Click it and Unblock the Notifications











