Amala paul: கொஞ்சம் கூட மனிதாபமே இல்ல.. அமலாபால் மீது மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு!

சென்னை: சிந்து சமவெளி என்ற விவகாரமான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால். தற்போது கோலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் குறித்து, வட மாநில மேக்கப் கலைஞர் ஒருவர் புகார் கூறியுள்ளார். நடிகை அமலா பால், படப்பிடிப்பின் போது, மனிதாபமே இல்லாமல் நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.

வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராக மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருப்பவர் ஹேமா. இவர் பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் மேனாக இருந்து வருகிறார். அண்மையில், இவர் தனது மேக்கப் அனுபவம் குறித்து இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Amala Paul jagat desai

கசப்பான அனுபவம்: ஒருமுறை நான் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். இந்த நேரம் ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயிலாக இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒப்புக்கு கூட நிழலோ, மரமோ இல்லாதால், கொஞ்ச நேரம் கூட எங்கேயும் உட்கார முடியவில்லை. இதனால், அங்கிருந்த சில பெண்கள் தவித்தோம். இதனால், அங்கே இருந்த கேரவேனுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டோம். ஆனால், நாங்கள் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே அமலா பால் தனது மானேஜரை அழைத்துத் எங்களை வெளியேற்றும் படி சொல்லி அனுப்பினார். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். ஆனால் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கினோம்.

மனிதாபமே இல்லை: அந்த படப்பிடிப்பு முடியும் வரை இதுபோன்ற சம்பவம் எனக்கு நிறைய ஏற்பட்டது. நான் பல ஸ்டார் நடிகைகளுக்கு மேக்கப் போட்டு இருக்கிறேன் அவர்கள் அனைவரும் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். குறிப்பாக நடிகை தபு,எங்களைப் போன்றவர்களுக்காக வேனையெல்லாம் புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால், அமலா பால் மனிதாபமே இல்லாமல் நடந்து கொண்டார். படப்பிடிப்பில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான். அவர்கள் தான் கேமராவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை அழகாகக் காட்டுகிறார்கள். இருந்தாலும், பல நேரங்களில், அவர்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கொடுக்கப்படுவதில்லை என்று மேக்கப் கலைஞர் ஹேமா அந்த பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நடிகை அமலா பால்: நடிகை அமலா பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாய் என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது. இதையடுத்து, நடிகை அமலா பாலுக்கு கடந்த மாதம் 11ந் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் வீட்டுக்கு வரும் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்த அமலா பால் தனது குழந்தைக்கு இலாய் என்று பெயர் வைத்துள்ளதாக தெரிவித்திருந்தார். நடிகை அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியது. இப்படத்தில் பிரித்விராஜ் சுகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X