டைவர்ஸ் ஆன பெண்கள்தான் டார்கெட்?.. மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி தெரியாத பக்கங்கள் இதுவா? .. பிரபலம் ஓபன்

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவும் சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களை கிரிஸில்டா வெளியிட்டார். அதேசமயம் இத்திருமணம் குறித்து இதுவரை ரங்கராஜ் எதுவும் கூறவில்லை. இப்படிப்பட்ட சூழலில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டியை சேர்ந்த ரங்கராஜ் தனது தந்தை வழியில் சமையல் கலைஞராக மாறியவர். முக்கியமாக அந்த தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்ற அவர்; தமிழ்நாடு சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் வீட்டு விசேஷங்களுக்கு சமைத்து கொடுப்பவர். அதுமட்டுமின்றி டெல்லிவரை அவரது சமையல் வாசம் அடித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ ரங்கராஜ்: மிகவும் பிரபலமடைந்த அவர் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்துக்கு பிறகு வேறு எதிலும் நடிக்காத அவர்; இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி அவருக்கு மேற்கொண்டு பிரபல்யத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்களை பெற்றார் அவர். சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை கடந்த சில மாதங்களாக மனஸ்தாபத்தில் ஓடியதாக தெரிகிறது.

celebrity has said that Madhampatty Rangaraj only targets women who are divorce
Photo Credit:

இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருக்கு ஜாய் கிரிஸில்டாவுடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அவர்கள் இர்னடு பேரும் திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை கிரிஸில்டா தனது இன்ஸ்டா பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தார். இப்போதுவரை முதல் மனைவி ஸ்ருதியிடமிருந்து ரங்கராஜ் விவாகரத்து வாங்கவில்லை.

ஜாய்க்கும் 2வது திருமணம்: அதுமட்டுமின்றி ஜாய் கிரிஸில்டா ஆறு மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயமும் பெரும் பரபரப்பையும், வாக்குவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஜாய் கிரிஸில்டாவுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். ஏற்கனவே அவர் பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவர்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

பயில்வான் ரங்கநாதன் பேச்சு: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் மெட்ரோ மெயில் யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "மாதம்பட்டி ரங்கராஜ் அடிப்படையில் பொறியியல் படித்தவர். அந்தப் படிப்பை முடித்துவிட்டு என்ன செய்யலாம் என யோசித்து பெங்களூருவுக்கு சென்று தனது தந்தையிடம் தொழிலை கற்றுக்கொண்டார்.

டைவர்ஸ் ஆன பெண்கள்தான் டார்கெட்: அதனையடுத்து ஹோட்டலை ஆரம்பித்து தொழிலை நல்லபடியாக செய்தார். அவரும் ஸ்ருதியும் திருமணம் செய்துகொண்டார்கள். இப்போது ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவர்கள் இரண்டு பேரும் லிவிங்கில் இருக்கிறார்கள் என ஆறு மாதங்களுக்கு முன்பே நான் சொன்னேன். ரங்கராஜை பொறுத்தவரை டைவர்ஸ் ஆன பெண்களுக்குத்தான் வலை வீசுவார். ஏற்கனவே மூன்று பேருடன் லிவிங்கில் இருந்த அவர்; ஜாய் கிரிஸில்டாவை இப்போது திருமணம் செய்திருக்கிறார். இது நிர்பந்தத்தில் நடைபெற்ற திருமணம்" என்றார்.

அவரது இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் அவர் இப்படி பேசியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X