Nayanthara - கேரளாவில் நயன்தாரா தொடங்கும் புதிய தொழில்?.. அப்போ நடிப்பு என்ன ஆகும்?

திருவனந்தபுரம்: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாரா கேரளாவில் புதிய தொழிலை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் அதற்காக கோடிகளை முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கேரளாவில் ஒரு டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த நயன்தாரா. தமிழில் ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் படம் ஹிட்டாகி அவரது நடிப்புக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. அதனையடுத்து ரஜினிகாந்த்துடன் சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இணைந்தார். திறமையும், கவர்ச்சியும் ஒருசேர அவரிடம் இருந்ததால் அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.

Celebrity News in Tamil | Nayanthara will start new business in Kerala

காதல் பிரச்னைகள்: இந்தச் சூழலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவுடன் காதல் ஏற்பட்டு தோல்வியில் முடிந்தது. அதனையடுத்து வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவாவுடன் காதல்வயப்பட்டார். ஆனால் அந்தக் காதலும் பிரிவில் முடிந்தது. இந்த இரண்டு காதல் முறிவுகளையும் வைத்து நயன்தாராவை தனிப்பட்ட முறையில் பலர் விமர்சனம் செய்தனர். ஆனால் நயன் அதை காதில் போட்டுக்கொள்ளாமல் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் காதல்: தனது இரண்டாவது இன்னிங்ஸை மிகவும் கவனத்தோடு தொடங்கினார் நயன். அந்தவகையில் அவர் நடித்த படங்கள் ஹிட்டாக லேடி சூப்பர் ஸ்டாராக மாறினார். இதற்கிடையே நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்தார். இருவரது காதலும் பல வருடங்கள் கழித்து கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

இப்போதைய படங்கள்: நயன்தாரா இப்போது தமிழில் தனது 75ஆவது படத்திலும், ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து வடசென்னையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கை வாங்கியிருக்கிறார்கள் என்றும். அங்கு தியேட்டரை இடித்துவிட்டு மால் ஒன்றை கட்டவிருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அதனை அகஸ்தியா தியேட்டர் நிர்வாகம் மறுத்துவிட்டது.

பிஸ்னெஸ்: இதற்கிடையே நயன்தாரா சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை தொழில் முதலீடு செய்துவருகிறார். அந்தவகையில் அவர் லிப் பாம் பொருளின் மொத்த விநியோகஸ்தராகவும், வீட்டு அழகு சாதன பொருட்களை ஆன்லைனில் வியாபாரம் செய்யும் தொழிலிலும் அவர் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் புதிய தொழில் ஒன்றை கேரளாவில் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

என்ன தொழில்?: அந்தத் தகவலின்படி, நயன் ஏற்கனவே கேரளாவில் பல இடங்களை வாங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். அப்படி அவர் வாங்கி வைத்திருக்கும் இடத்தில் சகல வசதிகளும் கொண்ட பல அடுக்கு மாடி கொண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றை கட்டி அதை வாடைக்கு விட முடிவு செய்திருக்கிறாராம். இந்த ஐடியாவை விக்னேஷ் சிவன் நயனுக்கு கொடுத்ததாகவும் எனவே இந்தத் தொழிலில் பல கோடி ரூபாயை அவர் முதலீடாக போடப்போகிறார் என்றும் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.

சரிந்த மார்க்கெட்?: இதற்கிடையே பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் த்ரிஷா மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார். அதேசமயம் தனக்கு குழந்தைகள் பிறந்ததிலிருந்து அவர்களை வளர்ப்பதில் நயன் கூடுதல் கவனம் செலுத்திவருகிறார். எனவே அவர் படிப்படியாக சினிமாவிலிருந்து ஒதுங்கிவருகிறார். அதன் காரணமாகத்தான் சினிமாவைவிட தொழில் தொடங்குவதில் அதீத அக்கறை எடுத்துவருகிறார் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X