மாஃபியா படம் எப்படி.. நினைச்சதை விட செமையா இருக்கு.. சினேகா ரொம்ப ஹேப்பி!

Recommended Video

MAFIA MOVIE FDFS | AUDIENCE RESPONSE | FILMIBEAT TAMIL

சென்னை : நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் மாஃபியா. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை பார்த்த பல பிரபலங்களும் தங்களின் படத்தை பற்றிய கருத்துகளை பகிர்ந்து இருக்கின்றனர் .

மாஃபியா படத்தை துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கிறார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரித்து இருக்கிறது. படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருக்கிறார். படத்தில் அருண்விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். படம் பிப்ரவரி 21 வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

Celebrity Opinion on Mafia

படத்தை ரசிகர்களுடன் பார்த்த அருண்விஜய் நினைத்ததை விட படம் அருமையாக வந்திருக்கிறது என்றார். ரசிகர்கள் இவ்வாறு படத்தை கொண்டாடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று மிகுந்த ஆனந்ததுடன் கூறினார். மேலும் ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது என்று கேட்டதே, படத்தின் மிக பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் கூறினார் .

Celebrity Opinion on Mafia

தன் கணவர் சிறப்பாக நடித்திருப்பதாக சினேகா கூறியிருக்கிறார். படப்பிடிப்பின் போது வீட்டிற்கு வரும் பிரசன்னா படத்தின் பின்னணி இசையை அடிக்கடி பாடி கொண்டிருப்பார் அந்த இசையை படத்துடன் பார்க்கும் போது சூப்பராக இருந்தது என கூறினார். மேலும் பிரசன்னாவை வில்லனாக அஞ்சாதே படத்தில் பார்த்திருப்பேன் இந்த படத்தில் ஸ்டைலிஸான வில்லனாக என் கணவரை கார்த்திக் நரேன் காட்டி இருக்கிறார் என்று சினேகா கூறினார் .

Celebrity Opinion on Mafia

படத்தை பார்த்துவிட்டு பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் கலக்கிட்டாங்க என்றார். மேலும் கண்டிப்பாக இரண்டாம் பாகத்துக்காக நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். படத்தை பற்றிய கருத்துகளை பிரசன்னா, விஜயகுமார் மற்றும் ப்ரீத்தா விஜய்குமார் ஆகியோர் பகிர்ந்து இருக்கின்றனர் .

மாஃபியா படத்திற்கு பல இடங்களில் கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் அதனை தாண்டி படத்தில் அருண்விஜயின் லுக் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது என்றே சொல்லலாம். இதற்காகவே மாஃபியா படத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X