Don't Miss!
- News
"முன்பதிவு செயலி தேவை" ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வை காப்பாற்ற.. தமிழக அரசை வலியுறுத்தும் சீமான்!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Automobiles
டாடா மாருதி ஆட்டம் எல்லாம் இனி குளோஸ்! க்விட் இவி வந்ததும் துண்டை காணும் துணிய காணும்னு ஓட போறாங்க!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்து…தமிழில் வாழ்த்து சொன்னார் ராம் சரண்
சென்னை : ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு முன்னிட்டு பிரபலங்கள் பலரும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை தமிழ் மக்களால் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடும் இந்த நாளில் பலரும் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் சூர்யா, கார்த்தி, தெலுங்கு நடிகர் ராம்சரன் போன்ற பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வாடிவாசல் மோடுக்கு மாறிய சூர்யா.. கையில் மாடுடன் என்னம்மா நடந்து வறாரு பாருங்க.. செம வீடியோ!

இந்திய பிரதமர் வாழ்த்து
உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் உற்சாகத்துடன் தமிழ் புத்தாண்டு தினத்தை கொண்டாடி வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமிழ் பேசும் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் அதில் " அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோசங்களையும் தரட்டும். அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும் அனைவரும் ஆரோக்கியமாக மகிழ்வோடு இருக்க வாழ்த்துக்கள் " என தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா படத்தில் நடித்து வருகிறார். அதோடு வெற்றிமாறன் அடுத்து இயக்கும் வாடிவாசல் படத்துக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். வாடிவாசல் படத்தில் காளையுடன் இருக்கும் கதைக்களம் என்பதால் ஒரு குறிப்பிட்ட காளையுடன் பல மாதங்கள் பழகி வருகிறார். அதனுடன் ஒரு குறிப்பிட்ட நேரத்தை செலவிட்டு வருகிறார். இன்று அந்த காளையுடன் நடை பயணம் செய்தபடி நடிகர் சூர்யா மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் மிகவும் எளிமையாக காணப்படும் சூர்யாவின் வீடியோவை அவர் ரசிகர்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ராம்சரன் வாழ்த்து
ராஜமௌலி இயக்கிய RRR படம் உலகம் முழுக்க ரிலீஸாகி ஆயிரம் கோடி வசூல் செய்து இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. RRR படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ராம்சரண் தமிழ் மக்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் " உலகெங்கிலும் வாழும் எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். சுபகிருது வருடம் தங்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் சேர்க்க வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Filmibeat நேயர்களுக்கு பிரபலங்களின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழர்கள் சிறப்புற கொண்டாடும் புத்தாண்டு நாளில் Filmibeat நேயர்களுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதில் குறிப்பிடும்படியாக மிர்ச்சி சிவா, விக்ரம் பிரபு, எம்எஸ் பாஸ்கர், அம்மு அபிரமி , வர்ஷா பொல்லம்மா போன்ற பிரபலங்கள் தங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை Filmibeat tamil பார்வையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர்.