இன்று பிறந்த நாள் கொண்டாடிய திரைப்பிரபலங்கள் !

சென்னை : செப்டம்பர் 10ந் தேதியான இன்று திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

நடிகை மஞ்சுவாரியர் தனது 42 வது பிறந்த நாள் இன்று கொண்டாடினார். இவருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் ஒன்று திரண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறினர்.

அதேபோல பாடகி சின்மயி, சதிலீலாவதி, உன்னால் முடியும் தம்பி உள்ளிட்ட படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் அரவிந்த், உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் தங்களது பிறந்த நாளை வீட்டில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினர்.

வெற்றிமாறன் இயக்கிய அசுரன்

வெற்றிமாறன் இயக்கிய அசுரன்

மலையாள திரையுலகில் தனது சிறந்த நடிப்பின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டு தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

 ஜோதிகா நடிப்பில்

ஜோதிகா நடிப்பில்

இவ்வாறு பல ஆண்டுகளாக மலையாள திரையுலகில் கொடியை பறக்க விட்டு வரும் இவர் நடித்த "ஹவ் ஓல்டு ஆர் யூ" திரைப்படம் தமிழில் "36 வயதினிலே" என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தில் ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த நிலையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த

மஞ்சு வாரியர் மலையாள படங்கள் மட்டுமல்லாமல், சமீபத்தில் அசுரன் படத்தில் இவர் நடித்திருந்ததை தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக ஆனா மஞ்சுவாரியர் செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இனிய குரலில்

இனிய குரலில்

பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி தனது இனிய குரலில் மூலம் பல ஆண்டுகளாக ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

வெற்றிப் பாடல்களை

வெற்றிப் பாடல்களை

சூர்யா, ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை பாடியுள்ள சின்மயி செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகினர் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதன்முறையாக அறிமுகம்

முதன்முறையாக அறிமுகம்

நடிகர், இயக்குனர், தொகுப்பாளர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டு தென்னிந்திய திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்த் தமிழில் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கிய "மனதில் உறுதி வேண்டும்" என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டார்.

கேளடி கண்மணி

கேளடி கண்மணி

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான இவர், அவருடன் இணைந்து சதிலீலாவதி, உன்னால் முடியும் தம்பி சமீபத்தில் வெளியான உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதை தவிர கேளடி கண்மணி, மகராசன், பாட்டு வாத்தியார் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளார்.

56 வது பிறந்தநாள்

56 வது பிறந்தநாள்

தமிழைப் போலவே கன்னடத்திலும் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவ்வாறு பன்முகங்கள் கொண்ட நடிகர் ரமேஷ் அரவிந்த் செப்டம்பர் 10 ஆம் தேதியான இன்று தனது 56 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X