ஹேப்பி பர்த்டே ஜிவி பிரகாஷ்... இணையத்தில் குவியும் வாழ்த்து செய்தி !

சென்னை : எள்ளுவய பூக்களையே...ஏறெடுத்தும் பாக்கலையே... என அனைவரும் வியந்து போகும் அளவுக்கு ஒரு பாடலை தந்தவர் தான் ஜி.வி.பிரகாஷ் குமார்.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மைக்கொண்ட ஜிவி பிரகாஷ் இன்று தனது 35வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

6 வயதிலேயே

6 வயதிலேயே

ஆஸ்கர் விருது நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் அக்கா மகன் தான் ஜி.வி. பிரகாஷ். இசையின் மீது இருந்த ஆர்வத்தால் தனது 6 வயதிலேயே ஜென்டில் மேன் திரைப்படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலை தனது மழழை மாறாமல் பாடினார் ஜி.வி.

இசையமைப்பாளராக

இசையமைப்பாளராக

வசந்தபாலன் இயக்கத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்ற வெயில் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக அப்படத்தில் இடம் பெற்ற வெயிலோடு உறவாடி பாடல் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

ஹீரோவாக

ஹீரோவாக

இமையமைப்பாளராக இருந்து வந்த ஜிவி, டார்லிங் திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருந்தார். மியூசிக் மட்டும் வராது எனக்கு நடிக்கவும் வரும் என்பதை அந்த படத்தில் நிரூபித்து இருந்தார் ஜிவி. இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கைவசம் பல படங்கள்

கைவசம் பல படங்கள்

டார்லிங் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார், குப்பத்துராஜா என பல படங்களில் நடித்தார். இசை நடிப்பு என இரண்டிலும் கலக்கி வரும் ஜிவி பிரகாஷ். தற்போது, ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள்,ஜெயில், பேச்சளர் என பத்திற்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

இன்று 35வது பிறந்த நாளை கொண்டாடும் ஜி.விக்கு திரைப்பிரபலங்கள், நெருங்கி நண்பர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதே போல அவரின் ரசிகர்களும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X