சின்மயி, ராகுல் திருமண வரவேற்பில் விஜய், கார்த்தி, முருகதாஸ் பங்கேற்பு

By Siva

சென்னை: பாடகி சின்மயி, நடிகர் ராகுலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய் தனது பெற்றோருடன் கலந்து கொண்டார்.

பாடகி சின்மயி, நடிகர் ராகுல் ரவீந்திரனை மணந்தார். அவர்களின் திருமணம் சென்னையில் உள்ள சவேரா ஹோட்டலில் நடைபெற்றது. இதையடுத்து நேற்று மாலை சவேரா ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த கோலிவுட் பிரபலங்கள் யார், யார் என்று பார்ப்போம்.

விஜய்

விஜய்

இளையதளபதி விஜய் தனது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் ஷோபாவுடன் வந்து சின்மயி, ராகுலை வாழ்த்தினார்.

முருகதாஸ்

முருகதாஸ்

விஜய்யை வைத்து கத்தி படத்தை எடுத்து வரும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மணமக்களை வாழ்த்தினார்.

கார்த்தி

கார்த்தி

நடிகர் கார்த்தி திருமண வரவேற்பில் கலந்து கொண்டு சின்மயி, ராகுல் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கௌதம் மேனன்

கௌதம் மேனன்

அஜீத் குமாரை வைத்து தல 55 படத்தை இயக்கி வரும் கௌதம் மேனன் சின்மயிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சேரன்

சேரன்

இயக்குனர் சேரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வதித்தார்.

பெற்றோர்

பெற்றோர்

விஜய் தனது அம்மா ஷோபா கையை பிடித்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

சிவா

சிவா

வணக்கம் சென்னை படத்தில் தன்னுடன் நடித்த ராகுலுக்கு மிர்ச்சி சிவா நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

தரணி

தரணி

இயக்குனர் தரணி வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

விவேக்

விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் புதுமணத் தம்பதிகள் பல்லாண்டு வாழ வாழ்த்தினார்.

விதியுலேகா ராமன்

விதியுலேகா ராமன்

நகைச்சுவை நடிகையான விதியுலேகா ராமன் தனது பெற்றோருடன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார்.

பவதாரணி

பவதாரணி

இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி சக பாடகியான சின்மயியை வாழ்த்தினார்.

பி. சுசீலா

பி. சுசீலா

பிரபல பின்னணி பாடகி பி. சுசீலா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வதித்தார்.

பார்த்திபன்

பார்த்திபன்

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தானே செய்த பரிசை மணமக்களுக்கு அளித்தார்.

வசந்த்

வசந்த்

இயக்குனர் வசந்த் சின்மயி, ராகுல் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

விக்ரமன்

விக்ரமன்

குடும்ப கதைகளை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் விக்ரமன் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்.

ஸ்ரீகாந்த் தேவா

ஸ்ரீகாந்த் தேவா

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மணமக்களான சின்மயி, ராகுலை வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X