ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு: அண்ணன் விஜய், நண்பர்கள் பங்கேற்பு
Recommended Video

சென்னை: ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
ஆர்யா, சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவின் நெருங்கிய நண்பர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

சயீஷா
ஆர்யா கோட் சூட் அணிந்து அம்சமாக இருந்தார். சயீஷா திருமணத்தை போன்றே வரவேற்பு நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற உடை அணிந்திருந்தார். சிம்பிளாக அதே சமயம் மிகவும் அழகாக இருந்தார் அவர்.

விஜய்
தன்னை கோலிவுட்டில் அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் ஏ.எல். விஜய்யை சயீஷா தனது சொந்த அண்ணனாக நினைக்கிறார். தங்கையின் திருமணம் மட்டும் இன்றி வரவேற்பு நிகழ்ச்சியிலும் விஜய் கலந்து கொண்டார்.

பரத்
ஆர்யாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான பரத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

மனைவி
நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது மனைவியுடன் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார்.


Click it and Unblock the Notifications











