'கழுகு' கிருஷ்ணா திருமண வரவேற்பில் கார்த்தி, ஆர்யா

By Siva

சென்னை: கழுகு பட புகழ் கிருஷ்ணா, கைவல்யா திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கழுகு படம் மூலம் புகழ்பெற்றவர் கிருஷ்ணா. இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி ஆவார். அவருக்கும், கோவையைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியரான கைவல்யாவுக்கும் கடந்த 6ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் சென்னையில் இருந்து சென்றிருந்தனர்.

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

திருமணம் கோவையில் நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் வந்தபோது எடுத்த படம்.

விவேக்

விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று சென்னையில் நடந்த சிம்புவின் தங்கை இலக்கியாவின் திருமண வரவேற்புக்கும் சென்றார். மேலும் அதே நாளில் நடந்த கிருஷ்ணாவின் திருமண வரவேற்புக்கும் வந்தார்.

சௌகார் ஜானகி

சௌகார் ஜானகி

பழம்பெரும் நடிகையான சௌகார் ஜானகி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து கிருஷ்ணா மற்றும் கைவல்யாவை ஆசிர்வாதம் செய்தார்.

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு கிருஷ்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். சர்வம் படத்தில் விக்ரம் பிரபு இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றினார்.

பிரபு

பிரபு

நடிகர் பிரபு சிம்புவின் தங்கை இலக்கியா, அபிலாஷ் தம்பதியின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். மேலும் கிருஷ்ணா, கைவல்யாவின் திருமண வரவேற்புக்கும் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

கார்த்தி

கார்த்தி

நடிகர் கார்த்தியும், அவரது உறவினரும் ஸ்டுடியோ கிரீன் உரிமையாளருமான ஞானவேல் ராஜா ஆகியோர் மணமக்களுக்கு நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஆர்யா

ஆர்யா

விஷ்ணுவர்தன் இயக்கிய சர்வம் படத்தின் ஹீரோவான ஆர்யா கிருஷ்ணாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எஸ்.ஜே. சூர்யா

எஸ்.ஜே. சூர்யா

இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா விஷ்ணுவர்தன் தம்பியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

ராம்கி, நிரோஷா

ராம்கி, நிரோஷா

நடிகர் ராம்கி, தனது மனைவி நிரோஷாவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ராம்கி இன்னும் அப்படியே இருக்கிறாரே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X