டி.ஆர். மகள் திருமண வரவேற்பில் கருணாநிதி, ரஜினி, விஜய்

By Siva

சென்னை: நடிகரும், இயக்குனரும், அரசியல்வாதியுமான டி. ராஜேந்தரின் மகள் இலக்கியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

நடிகரும், இயக்குனரும், அரசியல்வாதியுமான டி. ராஜேந்தரின் மகள் இலக்கியாவுக்கும், ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷுக்கும் திருமணம் நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இதையடுத்து நேற்று மாலை அதே ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து இலக்கியா, அபிலாஷ் ஆகியோரை வாழ்த்தினார். அவரது கோச்சடையான் படம் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸாகிறது.

விஜய்

விஜய்

இளையதளபதி விஜய் ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தபோதிலும் சிம்புவின் தங்கை இலக்கியாவின் திருமண வரவேற்புக்கு தவறாமல் வந்துவிட்டார்.

ரவி

ரவி

ஜெயம் ரவி நண்பன் சிம்புவின் தங்கையின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். அவர் தற்போது நயன்தாராவுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

பிரபு

பிரபு

நடிகர் பிரபு தனது மகன் விக்ரம் பிரபுவுடன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். விக்ரம் பிரபு கோட்சூட்டில் ரொம்பவே ஸ்லிம்மாகத் தெரிகிறார்.

கார்த்தி

கார்த்தி

நடிகர் கார்த்தி, தனது உறவினரும் தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜாவுடன் சிம்பு வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார். கார்த்தி பாட்ஷா ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுகிறார்.

வெங்கட்

வெங்கட்

இயக்குனர் வெங்கட் பிரபு தனது மனைவி மற்றும் தம்பி பிரேம்ஜி அமரனுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். வெங்கட் பிரபுவின் கோவா படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருணாநிதி

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

தனுஷின் மனைவியும், இயக்குனருமான ஐஸ்வர்யா தனுஷ் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தனுஷ் அவரது 2வது இந்தி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார்.

பாண்டிராஜ்

பாண்டிராஜ்

சிம்பு, நயன்தாராவை வைத்து இது நம்ம ஆளு படம் எடுக்கும் பாண்டிராஜ் தனது ஹீரோ வீட்டு விசேஷத்திற்கு வந்திருந்தார். அந்த படத்தில் நடிக்கும் சூரியும் உடன் வந்திருந்தார்.

சேரன்

சேரன்

இயக்குனர் சேரன் சிம்பு தங்கையின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். சேரன் தாடி, மீசையுடன் ஒருவித கெட்டப்பில் வந்திருந்தார்.

குஷ்பு

குஷ்பு

இயக்குனர் சுந்தர் சி தனது மனைவியும், நடிகையுமான குஷ்புவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். சிம்பு ஷெர்வானியில் பவ்யமாக போஸ் கொடுத்துள்ளார்.

விக்ரமன்

விக்ரமன்

குடும்ப சென்டிமென்ட் கதைகளை கொடுப்பதில் வல்லவரான இயக்குனர் விக்ரமன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார்.

ஷங்கர்

ஷங்கர்

கோலிவுட்டில் பல ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத அளவுக்கு முதலிடத்தில் உள்ள இயக்குனர் ஷங்கர் சிம்புவின் தங்கை இலக்கியாவை வாழ்த்தினார்.

பாக்யராஜ்

பாக்யராஜ்

இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தனது மனைவி பூர்ணிமாவுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். நீண்ட காலம் நடிக்காமல் இருந்த பூர்ணிமா விஜய்யின் ஜில்லா மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சௌத்ரி

சௌத்ரி

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தனது மனைவி, மருமகள் சுப்ரியா மற்றும் பேரன் ஸ்பர்ஷுடன் வந்திருந்தார். ஸ்பர்ஷ் நடிகர் ஜீவாவின் செல்ல மகன் ஆவார்.

காயத்ரி

காயத்ரி

நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் இலக்கியா, அபிலாஷ் திருமண வரவேற்புக்கு வந்திருந்தார். காயத்ரி ஐஸ்வர்யா தனுஷ் கௌதம் கார்த்திக்கை வைத்து எடுத்து வரும் படத்தில் நடித்து வருகிறார்.

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

முன்னாள் மத்திய அமைச்சரான தயாநிதி மாறன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தங்கையின் திருமணம் முடிந்துவிட்டது. அடுத்தது சிம்புக்கு தானே திருமணம்?

மீனா

மீனா

நடிகை மீனா டி. ராஜேந்தரின் மகளை வாழ்த்தினார். மீனா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்ந்து நடித்த மலையாள படமான த்ரிஷ்யம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

முத்துராமன்

முத்துராமன்

இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் திருமண வரவேற்புக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். அவர் தனக்கே உரிய வெள்ளை நிற ஆடையில் வந்திருந்தார்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். திமுகவினர் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் திருச்சியில் நடக்கும் மாநில மாநாட்டுக்கு தயாராகி வருகின்றனர்.

பாலசந்தர்

பாலசந்தர்

இயக்குனர்கள் பாலசந்தர், வசந்த் ஆகியோர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

சித்ரா

சித்ரா

சின்னக்குயில் சித்ரா இலக்கியாவை வாழ்த்தினார். திரைத்துறையில் பாட வருபவர்கள் பலருக்கும் முன் உதாரணமாக இருப்பவர் சித்ரா.

பாரதிராஜா

பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா நண்பர் டி. ராஜேந்தரின் மகளின் திருமண வரவேற்புக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ரவிக்குமார்

ரவிக்குமார்

இயக்குனர் ரவிக்குமார் மணமக்களை வாழ்த்திவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அன்புமணி

அன்புமணி

முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனுமான அன்புமணி ராமதாஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

விஜயகுமார்

விஜயகுமார்

நடிகர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். விஜயகுமார் முகத்தில் தற்போது மகிழ்ச்சியை காண முடிகிறது.

விவேக்

விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

நெப்போலியன்

நெப்போலியன்

நடிகர் நெப்போலியன் டி. ராஜேந்தரின் மகள் மற்றும் மருமகனை வாழ்த்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X