தேர்தல்: அனிருத் கையில் மை பாட்டிலையே கொட்டிட்டாங்களோ?
Recommended Video
சென்னை: திரையுலக பிரபலங்கள் வாக்களித்துவிட்டு மை படிந்த விரலை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
லோக்சபா தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் பிரபலங்கள் ஓட்டு போட்டுவிட்டு மை படிந்த விரலை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள்.
ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜித், விஜய் ஆகியோர் காலையிலேயே வாக்களித்துவிட்டனர்.
அனிருத்
வாக்களித்துவிட்டு அனிருத் தனது விரலை மட்டும் புகைப்படம் எடுத்து ட்வீட் செய்துள்ளார். அதை பார்த்தவர்கள் என்ன அனி, மை பாட்டிலையே கையில் ஊற்றிவிட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
முருகதாஸ்
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வாக்களித்துவிட்டார்.
பார்த்திபன்
வாக்களித்துவிட்டு போட்டாச்சி போட்டாச்சி என்று ட்வீட் செய்துள்ளார் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன்.
குஷ்பு
நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு வாக்களித்துவிட்டார்.
சீனு ராமசாமி
உலகத்தில் கேட்க கூடாத கேள்விகள் "யாருக்கு ஓட்டு போட்டீங்க " என்பதும்
10வகுப்பு மாணவனிடம் "எவ்வளவு மார்க் வாங்குன" எனபதும் தான்.
வரிசையில் நின்று வாக்களிப்பது சந்தோஷம்.
வாக்களிப்பது
நம் முக்கியமான கடமை என்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.


Click it and Unblock the Notifications











