புல்வாமா தீவிரவாத தாக்குதல்: சூர்யா, விக்கி, அக்கி, டாப்ஸி கடும் கண்டனம்
Recommended Video

சென்னை: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து திரையுலக பிரபலங்கள் ட்வீட் செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் 44 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலுக்கு திரையுலக பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சூர்யா
புல்வாமாவில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அறிந்து மிகுந்த கவலை அடைந்ததுடன், இதயம் நொறுங்கிவிட்டது. நமக்காக மகன், சகோதரர், கணவர் அல்லது தந்தையை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் சூர்யா.
விக்னேஷ் சிவன்
நம் வீரர்கள் மீது நடந்த தாக்குதலை பார்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபமும், கவலையும் அடைந்துள்ளார்.
அக்ஷய் குமார்
புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து நடிகர் அக்ஷய் குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீரமரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்கிறார்.
டாப்ஸி
நம் வீரர்கள் வீரமரணம் அடைந்தது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சனைக்கு என் வாழ்நாளிலேயே தீர்வு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக டாப்ஸி தெரிவித்துள்ளார்.
ஹன்சிகா
புல்வாமா தாக்குதல் குறித்து அறிந்து வேதனை அடைந்தேன். வீர மரணம் அடைந்த நம் வீரர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.


Click it and Unblock the Notifications











