அன்புவுக்கு ஆதரவாக வாய்ஸ் தரும் திரையுலக விஐபிகள்.. ஒதுக்கப்படுகிறாரா சசிக்குமார்?

By Siva

சென்னை: பைனான்ஸியர் அன்புச்செழியன் நல்லவர், வல்லவர் என்று ஆளாளுக்கு புகழ்கிறார்கள். அப்படி என்றால் ஒரே இரவில் சசிகுமாரை ஒதுக்கி வைக்க முடிவு செய்துவிட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நான் தற்கொலை செய்து கொள்ள பைனான்ஸியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக் குமார் தெளிவாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அன்புச்செழியன் தலைமறைவாகிவிட்டார்.

அட்ராசிட்டி

அட்ராசிட்டி

பணம் கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க அன்புச்செழியன் என்ன அடாவடி எல்லாம் செய்வார் என்பது திரையுலகில் உள்ள அனைவருக்குமே தெரியும். இருப்பினும் அவரை காட்டிக் கொடுக்காமல் பயப்படுகிறார்கள். அன்புச்செழியனை கைது செய்தால் அவரை நம்பி இருக்கும் பல படங்கள் பாதிக்கப்படும் என்று திரையுலகினர் அஞ்சுவதாக கூறப்படுகிறது.

வல்லவர்

வல்லவர்

பணத்தை திரும்ப வாங்குவதில் பொல்லாதவராக இருக்கும் அன்புச்செழியனை அன்பு அண்ணன் நல்லவர், வல்லவர், ஸ்வீட்டானவர், நைஸானவர், மரியாதையானவர் என்று சரத்குமார், தேவயானி, சுந்தர் சி., சீனு ராமசாமி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

பயம்?

பயம்?

அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர் என்று கிசுகிசுக்கப்படும் தேவயானி கூட அவரை நல்லவர் என்று கூறியிருப்பது அவர் மீதான பயத்திலா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கைது

கைது

அன்புச்செழியனுக்கு எதிராக கடிதம் என்ற வலுவான ஆதாரம் இருந்தும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாக இருப்பதும் சிலரின் ஆதரவுடன் தான் என்று தகவல் கசிந்துள்ளது.

ஒதுக்கப்படுகிறாரா?

ஒதுக்கப்படுகிறாரா?

அன்புச்செழியன் மீது போலீசில் புகார் அளிக்காமல் இருக்குமாறு சசிகுமாருக்கு தூதுவிட்டனர். ஆனால் அவர் அதையும் மீறி புகார் கொடுத்தார். இந்நிலையில் பிரபலங்கள் அன்புவை ஆதரிப்பது சசிகுமாரை ஒதுக்கி வைக்க முடிவு செய்தது போன்று உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X