நடிகர் பாலகிருஷ்ணாவின் 2வது மகள் திருமணத்தில் நட்சத்திர பட்டாளம்

By Siva

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 2வது மகள் தேஜஸ்வினிக்கும் கீதம் நிறுவனர் எம்விவிஎஸ் மூர்த்தியின் பேரன் ஸ்ரீபரத்திற்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது.

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 2வது மகள் தேஜஸ்வினி. பி.இ. படித்துள்ள அவருக்கும் காந்தி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனர் எம்.வி.வி.எஸ். மூர்த்தியின் பேரன் ஸ்ரீபரத்திற்கும் இன்று காலை ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

டோலிவுட்டில் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவின் திருமணத்தை அடுத்து தேஜஸ்வினியின் திருமணம் தான் மிகப்பெரிய அளவில் நடந்தது என்று கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா, சிரஞ்சீவி, மோகன் பாபு மற்றும் குடும்பத்தினர், வெங்கடேஷ், ராமோஜி ராவ், ஜெகபதி பாபு, ஜெயசுதா, ரோஜா உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டனர். ஆனால் உறவினரான ஜூனியர் என்.டி.ஆர். வரவில்லை.

மணமக்கள்

மணமக்கள்

மணமகன் பரத் அமெரிக்காவில் முதுநிலைப்பட்டம் படித்துள்ளார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

அரசியல் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் சிரஞ்சீவி திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

மோகன் பாபு

மோகன் பாபு

பாலகிருஷ்ணாவின் நல்ல நண்பரான மோகன்பாபு தனது குடும்பத்தோடு வந்து வாழ்த்தினார்.

சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மணமக்களை வாழ்த்தினார். பாலகிருஷ்ணாவின் மூத்த மகளைத் தான் சந்திரபாபுவின் மகன் நர லோகேஷ் திருமணம் செய்துள்ளார்.

வெங்கி

வெங்கி

விக்டரி ஸ்டார் வெங்கடேஷ் மணமக்களை வாழ்த்தியபோது எடுத்த படம்.

கோபிசந்த்

கோபிசந்த்

அண்மையில் திருமணமான கோபிசந்த் திருமணத்திற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

ஜெயசுதா

ஜெயசுதா

தேஜஸ்வினி, பரத்தை வாழ்த்திய நடிகை ஜெயசுதா.

ரோஜா

ரோஜா

நடிகை ரோஜா மணமக்களை வாழ்த்தினார். ரோஜா ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகி ஆவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X