TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
நாகேஸ்வர ராவ் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி
ஹைதராபாத்: மறைந்த பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வர ராவின் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழம்பெரும் நடிகர் அகினேனி நாகேஸ்வர ராவ் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை உலக பிரபலங்கள், பொது மக்கள் என்று ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு
முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திர பாபு நாயுடு நாகேஸ்வர ராவ்காருக்கு அஞ்சலி செலுத்தினார்.
மகேஷ் பாபு
தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு ராவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
நம்ரதா
நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர் நாகேஸ்வர ராவின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது மலர் தூவி மரியாதை செய்தார்.
சித்தார்த்
நடிகர் சித்தார்த் நாகேஸ்வர ராவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அகில்
தாத்தாவின் உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியை துடைக்கும் நடிகர் நாகர்ஜுனா- நடிகை அமலாவின் மகன் அகில்.
ராஜமவுலி
பிரபல தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி டோலிவுட்டின் ஜாம்பவானுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஜூனியர் என்.டி.ஆர்.
தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோவான ஜூனியர் என்.டி.ஆர். நாகேஸ்வர ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ராணா
இளம் தெலுங்கு ஹீரோ ராணா நாகேஸ்வர ராவின் உடலுக்கு மரியாதை செய்தார்.
சுமன்
நடிகர் சுமன் ராவின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நாகேஸ்வர ராவின் உடலுக்கு ஏராளமான பொதுமக்களும் அஞ்சலி செலுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுஷ்கா
தனது சக நடிகர் நாகர்ஜுனாவின் தந்தையின் உடலுக்கு நடிகை அனுஷ்கா அஞ்சலி செலுத்தினார்.
பிரம்மானந்தம்
முன்னணி தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் நாகேஸ்வர ராவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார்.
ஜமுனா
பழம்பெரும் நடிகை ஜமுனா தந்தையை இழந்து வாடும் நாகர்ஜுனாவுக்கு ஆறுதல் கூறுகிறார்.
ஜெயசுதா
நாகேஸ்வர ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த ஜெயசுதாவும், நாகர்ஜுனாவும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறுகின்றனர்.