2013ம் ஆண்டில் 'திருமதி'களுடன் இணைந்த கோலிவுட் 'திருவாளர்கள்'!

By Siva

சென்னை: 2013ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட கோலிவுட் பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.

2013ம் ஆண்டுக்கு விடைகொடுக்க நாம் தயாராகி விட்டோம். அதே போல் 2014ம் ஆண்டை வரவேற்கவும், புத்தாண்டில் ஏற்க வேண்டிய உறுதிமொழிகள் குறித்தும் மக்கள் இப்பொழுதே திட்டமிடத் துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் 2013ம் ஆண்டில் திரை உலக பிரபலங்களில் யார், யாருக்கெல்லாம் திருமணம் நடந்தது என்று பார்ப்போம்.

ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் தனது காதலியான பாடகி சைந்தவியை மணந்தார். ஜி.வி. பென்சில் படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

எஸ்.ஆர். பிரபாகரன்

எஸ்.ஆர். பிரபாகரன்

சுந்தரபாண்டியன் பட இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரனுக்கும் அவரது உறவுக்கார பெண் திவ்யாவுக்கும் மதுரையில் திருமணம் நடந்தது. பிரபாகரன் இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கி வருகிறார்.

பரத்

பரத்

நடிகர் பரத் தனது காதலியான பல் டாக்டர் ஜெஸ்லியை செப்டம்பர் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

கதிர்

கதிர்

இயக்குனர் கதிர் பிசிஏ பட்டதாரியான சாந்தினி தேவியை கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி திருப்பரங்குன்றத்தில் வைத்து மணந்தார்.

கோபிசந்த்

கோபிசந்த்

ஜெயம் பட வில்லனும் தெலுங்கு ஹீரோவுமான கோபிசந்த் ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டார்.

பிளாக் பாண்டி

பிளாக் பாண்டி

நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கும் மதுரையைச் சேர்ந்த பட்டதாரியான உமாமகேஷ்வரிக்கும் கடந்த 1ம் தேதி திருமணம் நடந்தது.

சீமான்

சீமான்

இயக்குனர் சீமான் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். அ என்ற தமிழின் முதல் எழுத்து பொறிக்கப்பட்ட பதக்கத்துடன் கூடிய தாலியை அவர் கயல்விழியின் கழுத்தில் கட்டினார்.

நந்தா

நந்தா

மௌனம் பேசியதே படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் நந்தா. அவர் தனது உறவுக்கார பெண்ணான வித்யாரூபாவை மணந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X