நாங்க போட்டுக்கிட்டோம்.. நீங்களும் போடுங்க.. உற்சாகமூட்டிய ரம்யா கிருஷ்ணன், சிம்ரன்!
சென்னை : தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்கள் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்கள் சமூகவலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன், ராதிகா, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
வைரஸுக்கு எதிராக தடுப்பூசிப் போட்டுக்கொண்ட இன்னும் சில பிரபலங்கள் யார் யார் என்று இங்கே பார்க்கலாம்.

தடுப்பூசி போட்டார்
கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ஜீவா. மற்றவர்களைப் போலவே, அவரும் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் முதல் டோஸ் போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

அனைவரும் தடுப்பூசி போடுங்கள்
காஜல் மற்றும் அவரது கணவர் கௌதமுன் மும்பையில் மே7ந் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.. மற்றவர்களுக்கு சீக்கிரம் தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அதில், முதல் ஷாட் முடிந்தது. எல்லோரும், தயவுசெய்து முடிந்தவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

சிறந்த வழி
நடிகை சிம்ரன் தடுப்பூசி போடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தொற்றுநோயிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று நடிகை சிம்ரன் கேட்டுக்கொண்டார். மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆரோக்கியமாகவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் தடுப்பூசி தான் சிறந்த வழி. நான் முதல் டோஸ் போட்டுக்கொண்டேன். தயவுசெய்து உங்கள் அன்புக்குரிய அனைவருக்கும் உங்கள் பங்கைச் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

புத்திசாலித்தனம்
நடிகர் அருண்விஜய் மே6ந் தேதி தனது முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இது குறித்து, தனது ட்விட்டர் கணக்கு மூலம் தனது ரசிகர்களுக்கு தெரிவித்த அவர் அனைவருக்கும் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொண்டார். மேலும், தடுப்பூசி கிடைத்தது, இந்த இருண்ட காலத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவது நமது சமூகப் பொறுப்பு என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Got my first dose of vaccine today . People should take vaccines to avoid the risks of Covid19#Covid19Secondwave #Vaccine pic.twitter.com/uiN4pwRWbB
— Sakshi Agarwal (ssakshiagarwal) May 3, 2021
சரியான முடிவு
கடந்த வாரம் அரசாங்க இணையதளத்தில் தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்த சாக்ஷி அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தடுப்பூசிப் போட்டுக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நிலைமை மோசமாக உள்ளது, சரியான முடிவை எடுத்து அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று சாக்ஷி அகர்வால் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

தடுப்பூசி செலுத்தினார்
நடிகை சஞ்சிதா ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் தடுப்பூசி மருத்தை செலுத்திக் கொண்டார். இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.


Click it and Unblock the Notifications











