»   »  வீட்டில் பிணமாகக் கிடக்கும் நடிகைகள்: தனியாக வசிக்கும் பெண்களே உஷார்!

வீட்டில் பிணமாகக் கிடக்கும் நடிகைகள்: தனியாக வசிக்கும் பெண்களே உஷார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சபர்ணாவை போன்றே மும்பையில் ஒரு நடிகை அழுகிய நிலையில் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

நடிகைகள் தங்களின் வீட்டிலேயே பிணமாகக் கண்டுபிடிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. சிலர் விஷயத்தில் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியாமலேயே போய் விடுகிறது.

இந்நிலையில் மும்பையில் ஒரு நடிகை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

க்ரித்திகா

க்ரித்திகா

மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வந்த நடிகை க்ரித்திகா சவுத்ரி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

சபர்ணா

சபர்ணா

டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்களில் நடித்து வந்த சபர்ணா சென்னையில் தனது வீட்டில் அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.

ஜெயஸ்ரீ

ஜெயஸ்ரீ

சென்னை சாலிகிராமத்தில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயஸ்ரீ தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது.

ஜியா கான்

ஜியா கான்

முன்னதாக பாலிவுட் நடிகை ஜியா கான் மும்பையில் உள்ள தனது வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்பது இன்னும் முடிவாகவில்லை.

English summary
After Tamil actress Sabarna, hindi actress Kritika Choudhary has been found dead in her apartment in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil