மாற்றத்தை ஏற்படுத்துங்க ஆண்டவரே: கமலுக்கு ஆரவ், டிடி, விவேக் வாழ்த்து

By Siva

சென்னை: இன்று புதிய பயணம் துவங்கும் உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலக நாயகன் கமல் ஹாஸன் தனது கட்சியின் பெயரை இன்று மாலை மதுரையில் அறிவிக்கிறார். கமல் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் கமலை வாழ்த்தியுள்ளனர்.

பிக் பாஸ்

டியர் கமல் ஹாஸன் சாருக்கு வாழ்த்துக்கள். எங்களுக்கு நல்ல தலைவர் தேவை. அது நீங்களாக தான் இருக்க முடியும் என்று பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் ட்வீட்டியுள்ளார்.

கமல்

அனைவரும் அரசியல்வாதியை போய் சந்திக்கும்போது இங்கு ஒரு அரசியல்வாதியோ அவராக சென்று அனைவரையும் சந்தித்து பேசுகிறார். நல்லதே நடக்கட்டும் என்கிறார் ஆதவ் கண்ணதாசன்.

வாழ்த்து

இன்று முதல் கலாம் தலத்தில், புதிய தளத்தில், வளம் சேர்க்கக், களம் காணப் புறப்படும் கமல் அவர்களுக்கு, உளம் நிறைந்த வாழ்த்துக்கள் என நடிகர் விவேக் வாழ்த்தியுள்ளார்.

மாற்றம்

நீ பார்க்க விரும்பும் மாற்றமாக இருப்பாய். நமக்காக மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் கமல் ஹாஸன் சாருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X