வீல் சேரில் இருந்த நான் இன்று டான்ஸ் ஆடினேன்: வீடியோ வெளியிட்ட டிடி
Recommended Video

சென்னை: 3 ஆண்டுகள் கழித்து டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மேடையில் டான்ஸ் ஆடியுள்ளார்.
பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினி என்கிற டிடி 3 ஆண்டுகள் கழித்து மேடையில் நடனம் ஆடியுள்ளார். தான் மேடையில் ஆடியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர்.
அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவரை பாராட்டியுள்ளனர்.
நடனம்
முழங்கால் சர்ஜரிகளுக்கு பிறகு வீல் சேரில் இருந்த நான் மூன்று ஆண்டுகள் கழித்து மேடையில் ஆடினேன். புதிய நிகழ்ச்சிக்காக நடனமாடியதை நினைத்து பெருமையாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் டிடி.
பாஸ்
தன்னுடைய நடனத்தை பார்த்து பாஸ் பாராட்டியதால் டிடி மகிழ்ச்சியில் உள்ளார். இது தான் சிறந்த ட்வீட். பாஸ் போட்டுள்ளதால் அது மிகவும் ஸ்பெஷல். அவரை பெருமையடைய வைப்பது மிகவும் முக்கியம். லவ் யூ பாஸ். இதை நான் அடிக்கடி சொல்வது இல்லை ஆனால் உங்களுக்கு தெரியும் என்று டிடி ட்வீட் செய்துள்ளார்.
கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தும் டிடியை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.
உமா
டிடி மீண்டும் நடனமாடியதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக மற்றொரு பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான உமா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











