அப்பாாாா பாாாா அழகுடா நம்ம தளபதி: டிடி, தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து #HBDThalapathiVIJAY
Recommended Video

சென்னை :விஜய்யின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் 44வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. போஸ்டர்களில் விஜய் மரண மாஸாக இருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிர்ஷ்டம்
விஜய்க்கு தனுஷ் ட்விட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரசன்னா
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி உள்ளது அண்ணா என்று வாழ்த்தியுள்ளார் நடிகர் பிரசன்னா.
ஆர்யா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. சர்கார் லுக் கிளாஸி என்று வாழ்த்தியுள்ளார் ஆர்யா.
கஸ்தூரி
சர்கார் விஜய்க்கு நடிகை கஸ்தூரி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.
அப்பப்பா
அப்பாாாா அப்பாாாா அப்பாாாா பாாாா அழகு டா நம்ம தளபதி சர்கார் தீபாவளி அட்டகாசம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியுள்ளார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி.
லாரன்ஸ்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. உங்களின் நலம் மற்றும் வளத்திற்காக ராகவேந்திர சாமியிடம் பிரார்த்தனை செய்கிறேன். உங்களின் புதுப்படத்திற்கு வாழ்த்துக்கள். சர்கார் அருமை என்று ட்வீட்டியுள்ளார் லாரன்ஸ் ராகவேந்திரா.


Click it and Unblock the Notifications











