ரொம்ப மோசம்.. அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே என்னை அழைத்தனர்.. மனம் திறந்த பிரபல நடிகை!
சென்னை: கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவை விட்டு விலகி இருந்த பிரபல நடிகை, தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் மற்றும் சிக்கல் குறித்து விவரித்துள்ளார்.
ஜி5 ஸ்ட்ரீமிங் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ள Season's Greetings எனும் வெப்சீரிஸில் நடித்த நடிகை செலினா ஜெட்லி சினிமாவை விட்டு தான் ஏன் விலகினேன் என்பதை தற்போது பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த வீடியோ கால் பேட்டியில் கூறியுள்ளார்.

மிஸ் இந்தியா
கடந்த 2001ம் ஆண்டு மிஸ் இந்திய பட்டம் வென்ற செலினா ஜெட்லிக்கு சினிமா வாழ்க்கை ஆரம்பத்தில் மிகப்பெரிய வரவேற்பை வாரித் தந்தது. அதே ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்ட செலினா 4வது ரன்னர் அப்பாக வெளியேறினார். பேரழகு கொண்ட செலினாவுக்கு 2003ம் ஆண்டு ஜெனாஷீன் எனும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கொடி கட்டி பறந்தார்
2003ம் ஆண்டு பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்த நடிகை செலினா ஜெட்லிக்கு, தொடர்ந்து பல வாய்ப்புகள் வர சினிமாவில் கவர்ச்சி கன்னியாக கொடிகட்டி பறந்தார். சிசிலாய், நோ என்ட்ரி, ஷகலகா பூம் பூம், ஹே பேபி, மணி ஹை டோ ஹனி ஹை, கோல்மால் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

கிளாமர் குயின்
பின்னர், அவரது வளைவு நெளிவு கொண்ட கச்சிதமான தேகத்தை பார்த்த இயக்குநர்கள் கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே தொடர்ந்து செலினாவை நடிக்க வைத்தனர். ஹலோ டார்லிங், பேயிங் கெஸ்ட் உள்ளிட்ட படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி நடித்திருந்தார் செலினா ஜெட்லி. கன்னடத்தில் ஸ்ரீமதி எனும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

கர்ப்பத்துடன் நிர்வாணம்
2011ம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹாக் என்பவரை திருமணம் செய்து கொண்ட செலினா ஜெட்லி, கடந்த 2017ம் ஆண்டு பாத் டப்பில் நிர்வாணமாக போஸ் கொடுத்து திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி படம்
2011ம் ஆண்டு திருமணமாகி செட்டில் ஆன பின்னர், 2012ம் ஆண்டு அவர் நடித்திருந்த Will You Marry Me திரைப்படம் ரிலீசானது. அந்த படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகி விட்டார் செலினா. தற்போது அதற்கான காரணத்தை யூடியூப் பக்கம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

என்ன காரணம்
தொடர்ந்து தன்னை கிளாமர் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே இயக்குநர்கள் அழைத்ததாகவும், தனக்குள் இருந்த நடிகையை அப்படியே குழி தோண்டி புதைத்து விட்டதாகவும் கூறியுள்ளார். ஆபாசமாகவும், அரை நிர்வாணமாகவும் நடிக்க விருப்பம் இல்லாத நிலையில், சினிமாவை விட்டு விலக முடிவு செய்ததாக கூறியுள்ளார்.

3 பேர் மரணம்
சின்ன கேப்புக்கு பின்னர் நடிக்க வரலாம் என முடிவெடுத்து விலகிய நிலையில், பெற்றோர்கள் மற்றும் தனது ஒரு குழந்தையை இழந்தது அவரை மனதளவில் ரொம்பவே பாதித்து விட்டது. சின்னதாக சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க நினைத்த நிலையில், 8 ஆண்டுகள் அந்த மனக் காயங்கள் ஆற தேவைப்பட்டு விட்டது.

ஓவர் ஆபாசம்
பல முறை தன்னை வெப்சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடிக்க அணுகினார்கள். ஆனால், வெப்சீரிஸில் ஓவர் ஆபாசம், நிர்வாண காட்சிகளில் நடிக்கவே மீண்டும் வாய்ப்புகள் வந்தால், அவற்றை எல்லாம் தவிர்த்து வந்தேன், தற்போது நடித்துள்ள Season's Greetingsல் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே நடித்தேன். இனியும் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன் என செலினா மனம் திறந்து கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











