எலும்பு இருக்கு, சதை எங்கே?: பிரபல பாடகியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி
நியூயார்க்: பிரபல பாடகி செலின் டியோன் எலும்பும் தோலுமாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டைட்டானிக் பட தீம் பாடல் மூலம் உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் பிரபல பாடகி செலின் டியோன். அவர் எத்தனையோ பாடல்களை பாடியுள்ள போதிலும் இன்னும் டைட்டானிக் பாடலுக்காக கொண்டாடப்படுகிறார்.

ஏற்கனவே ஒல்லியாக இருந்த செலின் டியோன் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். கடந்த 1ம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படம் ஒன்றை செலின் டியோன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அவர் எலும்பும், தோலுமாக உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்ன செலின், உடம்புக்கு முடியவில்லையா, இப்படி ஒல்லியாகிவிட்டீர்களே என்று அக்கறையுன் கேட்டுள்ளனர்.
செலினின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது,
51 வயதாகும் செலின் டியோனை பார்த்தால் அவர் தேய்ந்து கொண்டிருப்பது போன்று தெரிகிறது. இதே வேகத்தில் உடல் எடை குறைந்தால் அடுத்து எலும்புக்கூடு போன்று தெரிவார். மெல்லச் சாக முடிவு செய்துவிட்டாரா செலின்?. டிசைனர் உடைகளுக்கு செய்யும் செலவில் நல்ல சாப்பாடு வாங்கி சாப்பிடுங்கள்.
ஆரோக்கியமாக இருந்தால் தான் உழைக்க முடியும். இப்படி நாளுக்கு நாள் குச்சியாகிக் கொண்டே போனால் உடல்நலம் பாதிக்கப்படும். எத்தனையோ பிரபலங்கள் ஒல்லியாவதை பார்த்துள்ளோம். ஆனால் நீங்கள் ஒரேயடியாக ஒல்லியாகிவிட்டீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் எடை குறைப்பு பெருமையாக தெரியலாம். ஆனால் பார்க்கும் எங்களுக்கு ரசிக்கும்படி இல்லை மாறாக வியப்பாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











