மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!

சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நடிகர் விவேக்கை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17-ஆம் தேதி அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சினிமாவில் அறிமுகமானதிலிருந்து காமெடி நடிகராக பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்ன கலைவாணர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

Cell Murugan and Actor Vaibhav celebrates Vivek 3rd year death anniversary and planting saplings

விவேக்கின் உதவியாளரான செல் முருகன் விவேக் மறைந்த பின்னரும் அவர் செய்து வந்த மரக்கன்றுகளையும் செடிகளையும் நடும் பணியை தொடர்ந்து விவேக் நினைவாக செய்து வருகிறார்.

சின்ன கலைவாணர் விவேக்: கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் தனது நகைச்சுவைகள் மூலமாக நல்ல கருத்துக்களையும் திணித்து நாட்டு மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். அதேபோல கருத்து கந்தசாமியாக மாறி நடிகர் விவேக் 750 ஸ்பேர் பார்ட்ஸில் ஓடாத இந்த வண்டி இத்துனூண்டு எலுமிச்சம் பழத்தால் ஓடப் போகுதா? எனக் கேட்டு காமெடி டிராக்கில் பகுத்தறிவையும் சிந்தனையும் எந்த அளவுக்கு புகுத்த முடியுமோ அந்த அளவுக்கு புகுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

Cell Murugan and Actor Vaibhav celebrates Vivek 3rd year death anniversary and planting saplings

தூள் கிளப்பிய காமெடிகள்: வடிவேலு ஒரு பக்கம் கிராமத்தை பேஸ் செய்து வெளியான படங்கள் நகைச்சுவை காட்சிகளில் நடித்து வந்த நிலையில் இன்னொரு பக்கம் நகர வாசிகளை மையப்படுத்தி உருவான கதைகளில் காமெடியனாக கலக்கியவர் விவேக். இருவரும் இணைந்து எரியுதடி மாலா என பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல படங்களில் செய்த காமெடியை எல்லாம் ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள்.

மூன்றாம் ஆண்டு நினைவு தினம்: நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. செல் முருகன் உடன் இணைந்து நடிகர் வைபவ் தனது வைபவ் 27 படக்குழுவினருடன் நினைவு தினத்தை அனுசரித்துள்ளனர்.

மரக்கன்றுகள் நடுதல்: அப்துல் கலாமின் பேச்சைக் கேட்டு இன்ஸ்பயரான விவேக் தொடர்ந்து பல லட்சம் மரக்கன்றுகளை தமிழ்நாட்டில் பல இடங்களில் நட ஆரம்பித்தார். அவர் மறைந்த பின்னர் அவர் செய்து வந்த அந்த நல்ல பணியை செல் முருகன் ஆரம்பித்து செய்து வருகிறார். தற்போது அவருடன் இணைந்து வைபவ்வும் செய்துள்ளார். தனது வைபவ் 27 படக்குழுவினர் அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி நடும் வீடியோவை தற்போது வெளியிட்டு விவேக்கின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X