ரீவைண்ட் பட்டன் இருந்தால் நல்லா இருக்கும்...கலங்கும் செல் முருகன்

சென்னை : நடிகர் விவேக், திடீர் நெஞ்சு வலி காரணமாக ஏப்ரல் 16 ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்ததால் ஆஞ்சியோ பிளாஸ்ட் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Recommended Video

நடிகர் Vivekh நண்பர் Cell Murugan உருக்கமான பதிவு | இனி யார் இருக்கா?

இருந்தும் விவேக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் 100 சதவீதம் இதய அடைப்பு இருந்ததன் காரணமாக, சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 17 ம் தேதி அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்தார். விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

விவேக்கிற்கு அஞ்சலி

விவேக்கிற்கு அஞ்சலி

விவேக்குடன் நடித்த நடிகர், நடிகைகள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவருடனான நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். விவேக்கின் நினைவாக பலர் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். தொடர்ந்து விவேக்கிற்கு பலவிதங்களிலும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செல்முருகன் பகிர்ந்த வீடியோ

செல்முருகன் பகிர்ந்த வீடியோ

இந்நிலையில் விவேக்கின் நெருங்கிய நண்பரான செல்முருகன், விவேக்குடன் எடுத்த வீடியோ ஒன்றை நேற்று நள்ளிரவு 11.43 மணிக்கு ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பின்னால் அமர்ந்து விவேக் கீபோர்டு வாசித்து கொண்டிருப்பது போலவும், அதற்கு செல்முருகன் இசையமைப்பது போன்று முகப்பாவம் காட்டுகிறார்.

வைரலாகும் வீடியோ

36 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவுடன், நம்மிடம் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தால் நன்றாக இருக்கும் என கருத்து பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர். சுமார் ஒன்றரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பலர் ரீட்வீட் செய்து, கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

யார் செல்முருகன்

யார் செல்முருகன்

மொபைல் ஃபோன் கடை ஒன்றில் பணியாற்றி வந்த செல் முருகன், நடிகர்-நடிகைகளுக்கு மொபைல் ஃபோன் விற்பனை செய்து வந்தார். பிறகு விவேக்கிடம் ஜுனியர் ஆர்டிஸ்டாக சேர்ந்த செல் முருகன், அவரது நெருங்கிய நண்பராகவும் மேனேஜராகவும் இருந்து வந்தார். காதல் சடுகுடு உள்ளிட்ட பல படங்களில் விவேக் உடன் இணைந்து நடித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: vivek விவேக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X