செல்ஃபி எடுக்கிறேன் என அனுமதி கேட்க மாட்டீர்களா?: சிவகுமார்

By Siva

Recommended Video

செல்போனை ஏன் தட்டிவிட்டேன்: சிவகுமார் விளக்கம்

சென்னை: ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருத்தரிப்பு மையத்தை திறந்து வைக்க சென்ற நடிகர் சிவகுமார் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியது.

இந்நிலையில் இது குறித்து சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது,

ரசிகர்கள்

ரசிகர்கள்

செல்பி எடுப்பது என்பது அவரவர் சொந்த விஷயம். நீங்கள் மற்றும் உங்கள் குடும்பம் கொடைக்கானல் ஏரி, ஊட்டி தொட்டபெட்டா போன்ற இடங்களுக்கு சென்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது பற்றி நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. ஆனால் பொது இடங்களில் அதுவும் 200, 300 பேர் கலந்து கொள்ளும் விழாவில் காரில் இறங்குவதிலிருந்து மண்டபத்திற்கு செல்வதற்குள் பாதுகாப்பிற்கு வரும் ஆட்களை கூட ஓரம் தள்ளிவிட்டு சுமார் 20, 25 பேர் கைபேசியை வைத்துக் செல்பி எடுக்கிறேன் என்று நடக்கக் கூட முடியாமல் செய்வது நியாயமா?

புகைப்படம்

புகைப்படம்

தங்களை புகைப்படம் எடுக்கிறேன் என்று கேட்கமாட்டீர்களா? விஐபி என்றால் தான் சொல்லும்படி தான் இருக்க வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம்? ஆயிரக்கணக்கான மக்களுடன் எத்தனையோ விழாக்களிலும், விமான நிலையங்களிலும் புகைப்படம் எடுத்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மனிதன்

மனிதன்

நான் புத்தன் என்று என்னைச் சொல்லவில்லை. உங்களைப் போல் நானும் ஒரு மனிதன் தான். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். மேலும், என்னைத் தலைவனாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுங்கள் என்று கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். அதேபோல், அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள் என்று சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

மன்னிப்பு

மன்னிப்பு

செல்போனை தட்டிவிட்டதற்காக சிவகுமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நெட்டிசன்கள் #SivakumarShouldApologize என்னும் ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகின்ற நேரத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X