பேட் கேர்ள் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்குமா... சிக்கலில் வெற்றிமாறன்... சென்சார் போர்டு சொல்வது என்ன?

சென்னை: வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. வெற்றிமாறனின் உதவி இயக்குநரான வர்ஷா பரத் எழுதி இயக்கியுள்ள பேட் கேர்ள் படத்தில் அஞ்சலி, ரம்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சர்ச்சைகளால் படம் ரிலீஸ் தேதி வெளியிடப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது. இதனிடையே, சென்சார் போர்டு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதால் இப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டனர்.

அரும்பு வயது: டீனேஜ் பருவத்தில் வளர்ந்து பெண்ணுக்கு ஏற்படும் ஆசைகள், கனவு, இச்சைகள் என தொடங்கி அவளது பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இப்படம் பேசுகிறது. ஒரு படத்தின் டீசர் ஒட்டுமொத்த படத்தின் கதையை தீர்மானித்துவிடாது. சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும், பாராட்டுக்களையும் இப்படம் பெற்றுள்ளது. ஆனால், இந்திய மரபுப்படி ஒரு கலாச்சார விடுதியாக காதலை பார்ப்பவர்களுக்கு ஓ இது சர்வதேச விழாவுக்கு சென்ற படமா! அப்படித்தான் இருக்கும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்ற கேள்விகளும் கோபமும் தான் அதிகம் ஏற்படுகிறது.

Bad Girls Vetrimaran Censor board

எதிர்ப்பு: இயக்குநர் மோகன் ஜி இப்படம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், ஒரு பிராமண பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சித்தரிப்பது இந்த குலத்தை இழிவுப்படுத்தும் வகையில் உள்ளது. வெற்றிமாறன், அனுராக் காஷ்யப்பிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். பிராமண பெண்களின் அப்பா, அம்மா பழையவர்கள் இல்லை, உங்கள் வீட்டிலிருந்து தொடங்குகள் என காட்டமாக பதிவிட்டிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை வெளியிடக் கூடாது என பதிவிட்டனர்.

வழக்கு: அதேபோன்று இப்படத்தின் டீசரில் பிராமண பெண்களை கொச்சைப்படுத்தும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி தணிக்கை சான்று வழங்கக் கூடாது என சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி கோவையை சேர்ந்த ராஷ்ட்ரீய சனாதன சேவா சங்க நிறுவன எஸ்.ராமநாத் என்பவர் சென்னை ஐ கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனால், பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. வெற்றிமாறன் மீதும் கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

Bad Girls Vetrimaran Censor board

ஆதரவு: அண்மையில் நடந்த டிராகன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், பேட் கேர்ள் படத்தின் மீதான விமர்சனத்திற்குள் வரவில்லை. இப்படத்தை இயக்கிய வர்ஷா பரத் என்ற குழந்தை வெளியே வர வேண்டும். பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்கு வர வேண்டும். ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முதல் படத்திலேயே அந்த பெண்ணோட கருத்தை முடக்க வேண்டாம் என பேசியிருந்தார். அதேபோன்று, இயக்குநர் செல்வமணியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

சென்சார் போர்டு: சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், சென்சார் போர்டு தந்துள்ள விளக்கம் ரசிகர்களை தலைசுத்த வைத்துள்ளது. பேட் கேர்ள் படத்திற்காக இதுவரை தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் எதுவும் வரவில்லை என தெரிவித்துள்ளது. ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சென்சார் போர்டுக்கு அளித்த மனு பரிசீலிக்கப்படும் என்று சென்சார் போர்டு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X